பக்கம்:பாவேந்தரின் பாட்டுத்திறன்.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

196 பாவேந்தரின் பாட்டுத்திறன்

பழங்கால இயற்கை செய்யும் 143

புதுக்காட்சி பருகு தம்பி

என்று வருணிப்பார். காலைக் கதிரவன் எழுந்ததும், இருளின்மீது சினத்தை வைக்க இருட்படலம் கரைந்து ஒடுகின்றது. கடலின் புட்கள் களித்தன; கைகொட்டி ஆர்த்தன. இளங் கதிரவன் தன் கதிர்களால் பொன்னிறத்தை எங்கனும் இறைக்கலானான்.

கடல்நீரும் நீலவானும் கைகோர்க்கின்றன. இரண்டிற்கும் இடைப்பட்டுக் கிடக்கும் வெள்ளம் எழில் வீணையாகின்றது. அவ்விணைமேல் அடிக்கின்ற காற்றுநரம்பினை அசைத்து நரம்பினை இயக்கவல்ல புலவனாகக் காணப்பெறுகின்றது. மாலை நேரக் கடற்காட்சி மனத்திற்கு அளிக்கும் இன்பம் சொல்லுந்தரமன்று. தடங்கடற்பெண் பொன்னுடை களைந்து புதிதான முத்துச் சேலை உடுத்திப் புதிய கோலம் கொள்ளுகின்றாள். இது நிலாக் காலக் கடல் கொள்ளும் கண்கொள்ளாக் காட்சியாகும்.

(2) குன்றம் மலை குறிஞ்சியின் முதற் பொருளாகும். மாலை நேர மலைக்காட்சி மாறாத மகிழ்ச்சி நல்கும். மாலை நேரக் குன்றத்தைக் கவிஞர்,

தங்கத்தை உருக்கி விட்ட

வானோடை தன்னி லேஓர் செங்கதிர் மாணிக்கத்துச்

செழும்பழம் முழுகும் மாலை செங்குத்தாய் உயர்ந்த குன்றின்

மரகதத் திருமே ணிக்கு மங்காத பவழம் போர்த்து

வைத்தது வையம் காண!” என்று காட்டுவார். தங்கத்தை உருக்கிவிட்டாலெனத் துலங்கும் வானத்து ஒடையில் மூழ்கும் நேரம் மாலை; மூழ்கும் இடம் குன்றம். பச்சைமலையில் பவழம் போர்த்ததுபோல மாலைக் கதிர் குன்றத்தைப் போர்த்து நிற்கின்றது. 43. அழகின் சிரிப்பு - பக்கம் 3 44. அழகின் சிரிப்பு- பக்கம் 14