பக்கம்:பாவேந்தரின் பாட்டுத்திறன்.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிஞர் நோக்கில் இயற்கை Y 197 மலைவீழ் அருவிகள் வயிரமாலைகள் போலவும், அடர்ந்தகொடிகள் பச்சைப்பட்டுத் துணிகளாகவும் குருவிகள் தங்கக் கட்டிகளாகவும், குளிர்ந்த மலர்கள் மாணிக்கக் கற்களின் குவியலாகவும் காட்சியளிக்கின்றன. எருதின்மீது பாயும் வேங்கை போலவும், நிலவுமேல் எழுந்த மின்னல்போலவும், சருகுகள் ஒளிசேர் தங்கத் தகடுகளாகவும் விளங்குகின்றன. மாலைநேரக் குன்றத்தைப்பற்றிய கவிஞரின் சொல்லோவியம் இது.

நீலமுக் காட்டுக் காரி

நிலாப்பெண்ணாள், வற்றக் காய்ந்த பாலிலே உறைமோர் ஊற்றிப்

பருமத்தால் கடைந்து, பானை மேலுற்ற வெண்ணெய் அள்ளிக் குன்றின் மேல் விசி விட்டாள்! ஏலுமட்டுந்தோ ழாதீ

எடுத்துண்பாய் எழிலை எல்லாம்!” நிலாவை நீல முக்காட்டுக்காரி” என்று உருவகிக்கின்றார். ‘நீலவான் ஆடைக்குள்ளே உடல் மறைத்து நிலாவென்று காட்டுகின்றாய்” (புரட்சிக்கவி) என்றார் பிறிதோர் இடத்தில், இவள் வற்றக் காய்ச்சிய பாலில் உறைமோர் “குத்தி பருமத்தால் கடைந்து. பானைமேல் இயன்றவரை அந்த எழிலை எடுத்துண்பாய், தோழா !” என்கின்றார் கவியரசு.

(3) ஆறு மருதநிலத்தை வளப்படுத்துவது ஆறு. இந்த ஆற்றைக் கவிமணி,

கல்லும் மலையும் குதித்து வந்தேன் பெருங்

காடும் செடியும் கடந்து வந்தேன் எல்லை விரிந்த சமவெளி - எங்கும்

இறங்கித் தவழ்ந்து தவழ்ந்து வந்தேன்.” என்று காட்டுவார்."ஆறில்லா ஊருக்கு.அழகு பாழ்’ என்பர் ஒளவைப் பாட்டி சங்க காலத்தில் “வழி” என்ற பொருளைத் தந்த இச் சொல் பல 45. அழகின் சிரிப்பு பக்கம் 7

46. மலரும் மாலையும்- ஆறு, பக்கம் 72 47. நல்வழி - 24