பக்கம்:பாவேந்தரின் பாட்டுத்திறன்.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிஞர் நோக்கில் இயற்கை 201 என்று ஆலின் சிறு விதையையும் அது மரமாக வளர்ந்த நிலையையும் காட்டுவார் அதிவீரராம பாண்டியர். பாவேந்தர் பாரதிதாசன் இந்த ஆலினை,

ஆயஊர் அடங்கும் நீழல்

ஆலிடைக் காண லாகும்!

நீலவான் மறைக்கும் ஆல்தான்

ஒற்றைக்கால் நெடிய பந்தல்” என்று காட்டுவார். இதனைக் காட்டியவர் அதனை விளக்கும் போக்கில், “ஆயிரம் கிளைகள் கொண்ட அடிமரம் யானை போன்றது. வானில் பரந்து நிற்கும் மிலார்களில் பவளக் காய்கள் செறிந்து காணப்படுகின்றன. இந்தக் காய்களை நிழலால் காக்கும் இலையெலாம் உள்ளங்கைகளைப் போன்றுள்ளன. கிளைகளைத் தாங்கி நிற்கும் விழுதுகள் தூண்கள் போன்றுள்ளன. இவை ஆலினைச் சுற்றி நிற்கும் மறவர் கூட்டம்போல் காணப்படுகின்றன. தொங்கும் விழுதுகள் வாலினைத் தரையில் வீழ்த்தி நிற்கும் மண்டிய பாம்பின் கூட்டம்போல் காணப்பெறுகின்றன என்பார் கிளைகளின் காட்சி இது:

தொலைவுள்ள கிளையின் வெளவால்

தொங்கிடும்; வாய்க்குள் கொண்டு குலைப்பழம், கிளை,கொடுக்கும்; கோதுகள் மழையாய்ச்சிந்தும்: தலைக்கொழுப் புக்கு ரங்கு

சாட்டைக்கோல் ஒடிக்கும்; பின்னால் இலைச்சந்தில் குரங்கின் வாலை

எலியென்று பருந்தி ழுக்கும்’ ஆலங்கிளையில் பாம்பு தொங்குகின்றது.அதனை விழுதென்று மயங்கித் தொட்ட குரங்கு, “விளக்கினைத் தொட்ட பிள்ளை வெடுக்கெனக் குதித்ததைப் போல்” கிளைதோறும் குதித்துத் தாவிக்

56. அழகின் சிரிப்பு- பக்கம் 34 57. அழகின் சிரிப்பு- பக்கம் 35