பக்கம்:பாவேந்தரின் பாட்டுத்திறன்.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

202 Y பாவேந்தரின் பாட்டுத்திறன்

கீழேயுள்ள விழுதுகளையெல்லாம் ஒளியுள்ள பாம்புகளாகக் கருதி உச்சிக்கிளைக்கு அச்சத்துடன் தாவிச் செல்கின்றது. சென்ற அது தன் வாலையே பாம்பென்று கண்டு மருண்டு துடிக்கும்!

பறவை பூஞ்சல் ஒன்றினையும் கவிஞர் காட்டுவார்:

ஆலினைக் காற்று மோதும்,

அசைவேனா எனச்சி ரித்துக் கோலத்துக் கிளைகுலுங்க

அடிமரக் குன்று நிற்கும்! தாலாட்ட ஆளில் லாமல்

தவித்திட்ட கிளைப்புள்ளெல்லாம் கால்வைத்த கிளைகள் ஆடக்

காற்றுக்கு நன்றி கூறும்!” இது கவிதையின் சிறந்த பெற்றியினையெல்லாம் உணர்த்தி நிற்கும் பாடல்.

(6) செந்தாமரை: திருமகளின் இருப்பிடம் செந்தாமரை. ‘அகலகில்லேன் இறையும்” என்று இருக்கும் நாரணன் மார்பும் அவளது நிலையான இருப்பிடமாகும். “பூவெனப் படுவது பொறிவாழ் பூவே எனத் தாமரை மலரைத் தமிழ் இலக்கியம் போற்றும். செந்தாமரையைப்பற்றிச் செந்நாப் புலவர் செம்மையாக விளக்குவர்.

கண்ணாடித் தரையின் மீது

கண்கவர் பச்சைத் தட்டில் எண்ணாத ஒளிமுத்துக்கள்

இறைந்தது போல்கு ளத்துத் தண்ணீரி லேப டர்ந்த

தாமரை இலையும், மேலே தண்ணீரின் துளியும் “கண்டேன்

உவப்போடு வீடு சேர்ந்தேன்’ கண்ணாடித் தரையின்மீது காணும் பச்சைத் தட்டில் கிடத்தப் பெற்ற ஒளி முத்துக்கள் பரப்பப் பெற்றனபோல, குளத்து நீரில் படர்ந்த

58. அழகின் சிரிப்பு - பக்கம் 37 59. அழகின் சிரிப்பு. பக்கம் 22