பக்கம்:பாவேந்தரின் பாட்டுத்திறன்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 பாவேந்தரின் பாட்டுத்திறன்

இயல் - 2

பாடுபொருள்

> வில் இன்னபொருள்தான் இருக்க வேண்டும் . இன்ன பொருள்தான் கவிதையில் அமைய வேண்டும் - என்ற ஒரு நியதி - ஒரு வரையறை இல்லை. திருக்குறளின் பெருமையைப் பற்றிக் கூறும் மதுரைத் தமிழ் நாகனார் என்ற சங்கப் புலவர்,

“ல்ைலாப் பொருளும் இதன்பால் உளஇதன்பால் இல்லாத எப்பொருளும் இல்லையால்” என்று கொல்லிவைத்தார். “பலவகைப்பட்ட நூல்களாலும் சொல்லப் பெற்ற எல்லாப் பொருள்களும் இந்நூலில் அடங்கியுள்ளன; இதனிடத்தில் இல்லாத யாதொரு பொருளும் எந்நூலகத்தும் இல்லை” என்பது இதன் பொருள். வள்ளுவர் நூலுக்குச் சொன்ன கருத்தே கவிதைக்கும் ஒக்கும். கவிதைக்கு உரிய பொருளாகக் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையும்,

வண்டி அற்புதப் பொருளாம் - வண்டி

மாடும் அற்புதப் பொருளாம்; வண்டி பூட்டும் கயிதும் - என்றன்

மனத்துக் கற்புதப் பொருளாம்.’ என்று தொடங்கி பல பொருள்களைப் பேசுகின்றார். இங்ஙனம் பேசியவர்,

அலகில் சோதி யான ஈசன் அருணி னாலே அமையும் உலகில் எந்தப் பொருளும் - கவிக்கு

உரிய பொருளாம் ஐயா?

என்று முடித்தவர்.

திருவள்ளுவ மாலை 29 2. மலரும் மாலையும்- கவிதை - பக்கம் 77 3. மலரும் காலையும். கவிதை - 3