பக்கம்:பாவேந்தரின் பாட்டுத்திறன்.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிஞர் நோக்கில் இயற்கை Y 205 புறாவின் ஒழுக்கத்தினைக் கூறும் முகத்தான் மாசுநிறைந்த மனித சமுதாயத்திற்கு நேரல் முறையில் அறிவுரை புகட்டுவார்.

ஒருபெட்டை தன்ஆண் அன்றி

வேறொன்றுக் குடன்படாதாம்; ஒருபெட்டை மத்தாப் பைப்போல்

ஒளிபுரிந் திடநின்றாலும் திரும்பியும் பார்ப்ப தில்லை

வேறொரு சேவல்! தம்மில் ஒருபுறா இறந்திட்டால்தான்

ஒன்றுமற் றொன்றை நாடும்!” புறாவின் வாழ்விலும் கற்பு தவறும் நிலைகளும் எழுவதுண்டு. சில புறாக்கள் - தறுதலைகள் - தவறி நடப்பதற்குக் காரணமும் கூறுவார் கவிஞர். இந்த தகாத பாடத்தை மனிதர்களிடமிருந்துதான் அவை கற்றுக்கொண்டிருத்தல் வேண்டும் என்பது கவிஞரின் கருத்து. ஒர் ஆண்புறா குடுகுடென்று ஓடிவந்து ஒரு பெண் புறாவைச் சுற்றிக் காதலால் உருகுவதுண்டு. பெண் புறா உடனே தன் கொலை பாய்ச்சும் கண்ணால் திரும்பிப்பார்த்துத் தலை நாட்டி “இங்கு வா” என்று பேசாத பேச்சாக அத்துாண்டுதலுக்குத் துலங்கும்.

மலைகாட்டி அழைத்தாலுந்தான் மறுப்பரோ மையல் உற்றார்?” என்று வேற்றுப்பொருள் வைப்பணியுடன் பேசுவார் கவிஞர்.

புறாக்கள் தம் குஞ்சுகட்கு உணவூட்டும் முறையைக் கூறி அவற்றின் அன்பினைப் புலப்படுத்துவார். தாய்இரை தின்ற பின்பு

தன்குஞ்சைக் கூட்டிற் கண்டு வாயினைத் திறக்கும்; குஞ்சு

தாய்வாய்க்குள் வைக்கும் மூக்கைத்; தாய்அருந் தியதைக் கக்கித்

தன்குஞ்சின் குடல்நிரப்பும்!

64. அழகின் சிரிப்பு - பக்கம் 39 65. அழகின் சிரிப்பு- பக்கம் 40