பக்கம்:பாவேந்தரின் பாட்டுத்திறன்.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

206 Y பாவேந்தரின் பாட்டுத்திறன்

ஒய்த்ததும் தந்ண்த ஊட்டும்!

அன்புக்கோர் எடுத்துக் காட்டாம்!”

புறாக்கள் மாலை நேரத்தில் கூட்டில் வந்தடைவதை நாடக அரங்கில் திரையினை இறக்குவதுபோல் காட்சியினைக் காட்டுவார். வானத்தில் சுழற்றிய கூர்வாள் போலப் புறாக்கள் வட்டமாகப் பறந்து செல்லும், இவ்வாறு உரிமையுடன் பறந்து செல்பவை மாலை நேரத்தில் கொத்தடிமைகள்போல் கூட்டை வந்தடையும். புறா வளர்க்கும் வேலனும் கூட்டைச் சாத்துகின்றான். இதனைக் கவிஞர்,

கூட்டினை வேலன் வந்து

சாத்தினான், குழைத்து வண்ணம் தீட்டிய ஓவியத்தைத்

திரையிட்டு மறைத்தான் போலே!” என்று நாடகபாணியில் தம் கவிதையை முடிக்கின்றார்!

(2) கிளி; கிளியைப்பற்றிய கவிஞரின் சொல்லோவியம் கிள்ளையையே நம்முன் கொண்டு வந்து நிறுத்தும்.

இலவின்காய் போலும் செக்கச்

செவேலென இருக்கும் மூக்கும் இலகிடு மணல்தக் காளி

எழில்ஒளிச் செங்காய்க் கண்ணும் நிலைஒளி தழுவிம் மாவின்

நெட்டிலை வாலும் கொண்டாய் பலர்புகழ் நின்ற பச்சைப்

புகங்கிளி வாராய்! வாராய்!” கிள்ளையின் ஆட்சியைக் காட்டும் சொல்லோவியமும் இத்தகையதே.

தென்னைதான் ஊஞ்சல் விண்தான்

திருவுலா வீதி! வாரித் தின்னத்தான் பழம்,கொட்டைகள்!

திருநாடு வையம் போலும்! 56. அழகின் சிரிப்பு - பக்கம் 40 67. அழகின் சிரிப்பு - பக்கம் 41 58. அழகின் சிரிப்பு - பக்கம் 42