பக்கம்:பாவேந்தரின் பாட்டுத்திறன்.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிஞர் நோக்கில் இயற்கை 207 புன்னைக்காய்த் தலையில் செம்மைப்

புதுமுடி புனைந்திருப்பாய்! உன்னைத்தான் காணுகின்றேன் கிள்ளாய்நீஆட்சி உள்ளாய்!” கிளியின் இருவகைப் பேச்சினைக் குறிப்பிடும் கவிஞர் மனிதர் வாழ்வில் காணும் உண்மையினை அங்கதமாக - எள்ளலாக - உதிர்க்கின்றார்.

காட்டிலே திரியும் போது

கிரீச்சென்று கழறு கின்றாய்; கூட்டினில் நாங்கள் பெற்ற

குழந்தைபோல் கொஞ்சுகின்றாய்! வீட்டிலே துரத்தம் என்பார்

வெளியிலே பிழைப்புக் காக ஏட்டிலே தண்ணிர் என்பார்

உன்போல்தான் அவரும் கிள்ளாப்!” இயற்கையை இனிமையாக வருணிக்கும் கிளியின் பாடல் ஒவ்வொன்றும் “அட்சர லட்சம்” பெறும் எனலாம். பெரும் புறாவும் கிளியும் இலக்கியங்களில் தூதுவிடும் பொருள்களாகும்.

4. இட வருணனைகள் நாட்டுப் புறத்தையும் நகர்ப் புறத்தையும் வருணித்துக் காட்டும் கவிஞரின் சொல்லோவியங்கள் சிந்தைக்கும் சிந்தனைக்கும் நல் விருந்தாகும். இவை முதற்பொருள் வருணனைகளாகும்.

(1) சிற்றுார்: சிற்றுார் நாட்டின் முதுகெலும்பு உயிர்நாடி

சேரிக்குப் பெரிது சிற்றுார்

தென்னைமா சூழ்ந்திருக்கும், தேர்ஒன்று கோயில் ஒன்று,

சேர்ந்தஓர் வீதி, ஒட்டுக் கூரைகள், கூண்டு வண்டி

கொட்டில்சேர் வீதி ஐந்தே;

69. அழகின் சிரிப்பு- பக்கம் 44 70. அழகின் சிரிப்பு- பக்கம் 44