பக்கம்:பாவேந்தரின் பாட்டுத்திறன்.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

!

சுவைத்திறன் 214 இயல் - 10

சுவைத்திறன்

சுவை எனினும் மெய்ப்பாடு எனினும் ஒக்கும். மெய்ப்பாடு என்பது வெளிப்படுவது என்று பொருள்படும். சுவையுணர்ச்சியே விருப்பு, வெறுப்பு முதலியவற்றைத் தந்து கண்ணிர் அரும்பல், மெய்ம்மயிர் சிலிர்த்தல் முதலிய மெய்க்குறிகளுடன் வெளிப்படுவதாதலின், சுவைக்கு மெய்ப்பாடு என்ற பெயர் பொருந்துவதாகின்றது.

சாதாரண ஒரு நிகழ்ச்சி. வண்ணப்படத்தில் வரையப்பெற்ற பன்றி ஒன்று சேற்றில் மூழ்கி வெளியேறிய தோற்றத்தை அப்படியே ஓவியர் காட்டுவதாக வைத்துக் கொள்வோம். அதைப் பார்க்கும் நாம் அதனையே பன்முறை உற்று நோக்கி ஒருவித இன்பத்தை அடைகின்றோம் அல்லவா? ஆயினும் யதார்த்த உலகில் பன்றி ஒன்று சேற்றில் புரண்டு எழுந்து சேறும் அழுக்குமாக நம் எதிரில் தோன்றினால் அக்காட்சியைக் கண்டு இன்பம் அடைகின்றோமா? இல்லையன்றோ ? சிலசமயம் அக்காட்சியைக் காணச் சகியாமல் அருவருப்புடன் முகத்தைக்கூட வேறு பக்கமாகத் திருப்பிக் கொள்ளுகின்றோமன்றோ? அதுவும் சேற்று நாற்றமும் சேர்ந்து வீசத் தொடங்கினால் சொல்ல வேண்டியதில்லை.இதிலிருந்து பெறப்படுவது என்ன? கலை நமக்கு ஊட்டுவது ஒர் இன்ப உணர்ச்சியின் விளைவு என்பதை நாம் அறிகின்றோம்.இதனையே இலக்கண நூலார் “சுவை” என்று பெயரிட்டுள்ளனர். சுவையை ஒன்பது வகையாகப் பிரித்தும் காட்டியுள்ளனர். சுவைகளின் நுட்பமனைத்தும் கண்ணாலும் செவியாலும் திட்பமாக அறியவல்ல நுண்ணறிவுடைய பெருமக்களுக்கே புலப்படும் என்றும், ஏனையோர்க்கு அஃது ஆராய்ந்தறிதற்கரியது என்றும் குறிப்பிடுவர் தொல்காப்பியர்.

சுவை-விளக்கம்: சுவை என்பது என்ன? அது காணப்படும் பொருளால் காண்போரகத்தின் வருவதோர் விகாரம் என்பர்

1. தொல், பொருள். மெய்ப் - 27