பக்கம்:பாவேந்தரின் பாட்டுத்திறன்.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

212 V பாவேந்தரின் பாட்டுத்திறன்

இளம்பூரணர். இதனை வேறொரு வகையால் விளக்கலாம். இனிப்பு கசப்பு, புளிப்பு, உவர்ப்பு, துவர்ப்பு, உறைப்பு என்பன “அறுசுவைகள்” என்பதை நாம் அறிவோம். இவை நாவாகிய பொறிவழியே ஒருவாறு உள்ளத்தில் தோன்றும் உணர்ச்சிகளாகும். இவ்வுணர்ச்சிகளைத் தரும் பொருள்கள் முறையே கரும்பு,வேம்பு, புளி, உப்பு, கடுக்காய்,மிளகு போன்றவைகள். இவை “சுவைப்படு பொருள்கள்” என்று வழங்கப்பெறும். கரும்பினை நாவாகிய பொறியால் சுவை உணருமிடத்து இனிப்புச் சுவை தோன்றுகின்றது. அங்ஙனம் தோன்றுங்கால் அது காரணமாக விருப்பு தோன்றுகின்றது. இங்ஙனமே வேம்பினைச் சுவைத்து உணருங்கால் கைப்புணர்ச்சி தோன்றுகின்றது. அது தோன்றுங்கால் வெறுப்பும் தோன்றுகின்றது. இங்ஙனம் உள்ளத்தில் தோன்றும் விருப்பு வெறுப்புகளே உள்ளக் குறிப்புகள் என்று வழங்கப் பெறுகின்றன. இத்தகைய உள்ளக் குறிப்புகளைக் கொண்டு இச்சுவை உணர்ச்சிகள் வெளிப்படுங்கால் முகமலர்ச்சி, முகச் சுளிப்பு முதலிய மெய்க்குறிகளைக் கொண்டு பிறர் அறியுமாறு வெளிப்படுகின்றன. இந்த மெய்க்குறிகளையே “விறல்” அல்லது “சத்துவம்” என்று வழங்குவர் இலக்கண நூலார்.

எனவே, சுவையின் இயல்பினை அறியுமிடத்து, காரண காரிய முறையாக சுவைக்குநிலைக்களனாகிய பொருள், சுவை, குறிப்பு, விறல் என நான்கு வகைப் பொருள்களை அறிகின்றோம். நாம் ஒரு காவியத்தைப் படிக்குங்கால் நம்மிடம் உண்டாகும் இன்ப உணர்ச்சியே சுவையாகும். மனம் உணர்ச்சியால் பூரித்திருக்கும்பொழுது அதில் ஒர்

2. விறல் பத்து வகைப்படும். அவை மெய்ம்மயிர் சிலிர்த்தல், கண்ணிர் வார்த்தல், நடுக்கம் எய்தல்,வியர்த்தல்,தேற்றம், களித்தல்,விழித்தல், வெதும்பல், சாக்காடு, குரல்சிதைவு என்பனவாகும். அவ்விறல், சுவைகளிலே மனக்குறிப்பு உளதாயவழி உடம்பிலே தோற்றும் உடம்பினும் முகத்து மிகத் தோற்றும்; முகத்தின் மிகத் தோற்றும் கண்ணில் கண்ணின் மிகத் தோற்றும் கண்ணின் கடையகத்து.இவை எட்டென்பது வடநூலார் மதம் (சிலப் பக்கம் 84 உ.வே.சா. அய்யர் பதிப்பு. இங்ஙனம் இலக்கண நூலார் கூறும் சுவைக்கப்படும் பொருள், சுவை, குறிப்பு விறல் என்பவற்றையே உளவியலார் முறையே பொருள் (Object), புலன்காட்சி (Perception), பொது உணர்வு (அநுபவம்),உடல்நிலை மாறுபாடுகள் (Organic states) என்று கூறுவர்.