பக்கம்:பாவேந்தரின் பாட்டுத்திறன்.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுவைத்திறன் Y 213

ஒளிவீசும்.அதுவே இன்பம், அதுவே ஆன்ம ஒளி ஆன்மா அங்குதான் பிரதிபலிக்கின்றது. அந்நிலையை அடைவதற்கு மனம் சலனமற்றிருக்க வேண்டும். அந்த அசைவற்ற நிலை மனத்திற்குப் பல வகைகளில் உண்டாகலாம். யோகியர் தம் மனத்தை வசப்படுத்தி நிலைநிறுத்திச் சமாதி நிலையில் ஆன்ம ஒளியைப் பெறுகின்றனர். உறக்கத்திலும் மனம் சோர்ந்து அசைவற்றுக் கிடக்கும்பொழுது அங்கும் ஆன்மா தோற்றமளிக்கின்றது. இன்பமும் தலைகாட்டுகின்றது. காவியங்களைப் படித்து உணர்ச்சிப் பெருக்கால் மனம் யூரிக்கும்பொழுது ஆன்ம ஒளி வீசும் மனத்திற்கும் மட்டற்ற மகிழ்ச்சி ஏற்படும். எனவே, காவியத்தைப் படித்து அதில் மனத்தை ஈடுபடுத்துபவர்களிடம் சுவையின் தன்மை தெளிவாகப் புலனாகும்.

சுவைகளின் தொகை: தொல்காப்பியர் சுவைகளை நகை, அழுகை, இளிவரல், வியப்பு, அச்சம், பெருமிதம், வெகுளி,உவகை என எட்டுவகையாக வரையறைப்படுத்திப் பேசுவர். இந்த எட்டும் அவை தோன்றும் நிலைக்களன்களின் அடிப்படையில் 32 வகையினைப் பெறும். அவை வருமாறு:

சுவைகள் நிலைக்களன்கள்

i. நகை எள்ளல், இளமை பேதைமை, மடன். 4 2. அழுகை இளிவு, இழவு, அசைவு, வறுமை 4 3. இளிவரல் மூப்பு, பிணி, வருத்தம், மென்மை 4 4. மருட்கை புதுமை, பெருமை, சிறுமை, ஆக்கம் 4. 5. அச்சம் அணங்கு, விலங்கு கள்வர், இறை 4 6. பெருமிதம் கல்வி, தறுகண், இசைமை, கொடை 4. 7. வெகுளி உறுப்பறை, குடிகோள், அலை, கொலை 4 8. 2_636f65 செல்வம், புலன், புணர்வு, விளையாட்டு 4

ஆக மொத்தம் 32.

உலகியல் நிகழ்ச்சிகள் சுவையன்று: உலகியலில் நிகழும் செயல்களால் உண்டாகும் இன்பத்தைச் சுவை என்று கொள்ளுதல்

4. தொல். பொருள் - மெய்ப் - 3