218 Y பாவேந்தரின் பாட்டுத்திறன் தொண்டு முதலிய சிறப்புகளில் மக்கள் எல்லோரோடும் ஒப்பநில்லாது உயர்ந்து நிற்றல் பெருமிதமாகின்றது எனக் கொள்ளுதல் பொருந்தும் பெருமிதம் என்பது. தன்னைப் பெரியனாக மதித்தல் என்பர் இளம்பூரணர். பெருமிதம் கல்வி, தறுகண், இசைமை, கொடை என்ற நான்கின் நிலைக்களனாகப் பிறக்கும் என்பர் தொல்காப்பியர். இங்கு இசைமை என்பது, இன்பமும் பொருளும் இறப்பப் பயப்பினும் பழியொடு செய்யாமையாகிய புகழ்ச்சித் திறம்.
அருள்மிகக் கொண்டே இருள்மிகு மக்கட்குத் தன்னலம் நீக்கிப் பிறர்நலம் காக்கும் தொண்டு செய்வதோர் தூய தம்மையாம் அத்தகு தவத்தைச் செய்தல் அரிதென நாட்டில் எண்ணுதல் வேண்டா; இத்தமிழ் நாட்டில் அத்தகு பெரியார் உள்ளார் அன்றோ? இல்லை என்றால் இத்தமிழ் மக்கள் இல்லா தொழிந்திருப் பார்கள் அன்றோ? இது திருச்சி வானொலியில் (14-1-1957) தந்தை பெரியார்பற்றிப் பாவேந்தர் பாடிய பாடல்.
பிறிதொரு பாடலில் தந்தை பெரியார் பாவேந்தர் வாக்கில் மக்கள் அன்புக் கடலின்மீதில் அறிவுத் தேகம் தங்கத் தேரில் தலைக் காட்டுகின்றார்.
மக்கள் நெஞ்சில் மலிவுப் பதிப்பு வஞ்சகர்க்கோர் கொடிய நெருப்பு மிக்க பண்பின் குடியிருப்பு விடுதலைப்பெரும் படையின் தொகுப்பு
தில்லி எலிக்கு வான்ப ருந்து தெற்குத் தினவின் படைமருந்து! கல்லா ருக்கும் கலைவி ருந்து கற்ற வர்க்கும் வண்ணச் சிந்து!
சுரண்டு கின்ற வடக்க ருக்குச் சூழ்அறுக்கும் பனங்க ருக்கு!