பக்கம்:பாவேந்தரின் பாட்டுத்திறன்.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுவைத்திறன் Y 219 மருண்டு வாழும் தமிழ ருக்கு வாழ வைக்கும் அருட்பெ ருக்கு:

தொண்டு செய்து பழுத்த பழம் துய தாடி மார்பில் விழும் மண்டைச் சுரப்பை உலகு தொழும் மனக்கு கையில் சிறுத்தை எழும்!

தமிழர் தவம்கொடுத்த நன்கொடை தன்ம னம்பா யும்தலை மேடை நமக்கத் தாண்டி வந்த வாட்படை” இந்தப் பாடல்களைப்படிக்கும்போதுநம்மிடையே பெருமிதச் சுவை தோன்றுவதை அறியலாம்.

(6) அச்சச் சுவை: அச்சம் என்பது பயம். அணங்கு விலங்கு. கள்வர், இறை என்ற நிலைக்களன்கள் வழியாக இச்சுவை பிறக்கும். அணங்காவன: எதிர்ப்பட்டாரை வருத்தும் இயல்பினவாகிய பேய், பூதம் முதலியன. நரிக்கண்ணனின் (பாண்டியன் பரிசு வஞ்சகத் திட்டப்படி “எட்டி” என்பான் பூத வேடமிட்டு அதிகாலையில் தென் மலையின் மீதேறி பெருங் கூச்சலிட்டான். விரைவில் ஊரெலாம் யூத அச்சம் பரவிவிட்டது. அவரவர் கற்பனைக் கொப்ப புளுகு மூட்டைகளை அவிழ்க்கத் தொடங்கினர். எங்கும் பூதச் சூழ்நிலை! அத்தெருவில் அவ்வீட்டில் பூதம் என்றும்

அதுபூதம் இதுபூதம் எனப்பு கன்றும் தொத்துகின்ற வெளவால்போல் மரத்தின் மீதும்

தூங்குகின்ற பூனைபோல் பரண்கள் மீதும் முத்தெடுக்கும் மனிதர்போல் கிணற்றினுள்ளும்

மூட்டையினைப் போல்வீட்டின் இடுக்கினுள்ளும் மொய்த்திருக்க லானார்கள்! கருத்தின் பூதம் முன்னிற்கும் பூதமாய் எங்கும் கண்டே” இப்படிப் பல பாடல்கள். இப்பாடல்களைப் படிக்கும்போது அச்சச் சுவையை அநுபவிக்கின்றோம்.

9. புகழ் மலர்கள் பக்கம் 50 10. பாண்டியன் பரிசு- இயல்- 49 - பக்கம் 87