பக்கம்:பாவேந்தரின் பாட்டுத்திறன்.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவேந்தர் நடையில் சங்கப் பாடல்கள் 223 இது மதுரை ஈழத்துப் பூதன்தேவனார் பாடியது. தலைவன் கூற்றாக அமைந்தது. தலைவன் தன் பாகனுக்குக் கூறுகின்றான்.

விளக்கம்: தலைவன் அரசனால் ஒரு செயலை முடிக்கும் பொருட்டு ஏவப்பெறுகின்றான். தலைவன் தன் தேரில் பயணத்தைத் தொடங்குகின்றான். போகும் வழியில் சாரதியை நோக்கி, இன்றே வினையை முடித்து நாளை அவசியம் திரும்பி விட வேண்டும். குன்றினின்று வீழும் அருவியைப்போல் தேரை விரைவாகக் கடவுவாயாக, விண்ணினின்று வீழும் எரிகொள்ளிகள் பசிய பயிர்களைத் துணிப்பதைப்போல, நம் தேர்ச் சக்கரங்கள் அப்பயிர்களைத் துணிக்கலாம். அதைப்பற்றிக் கவலை கொள்ளாது தேரை முடுக்குக. நாளை மாலையே வெள்ளிய வளையல்களை அணிந்த தலைவியின் மேனியை மணந்து உவப்போம் என்கின்றான்.

இந்தப் பாடலை இலகுவாக்கிய பாவேந்தரின் கவிதை இது;

நாமின்று சென்று நாளையே வருவோம்; விழும் அருவிபோல் விரைந்துதேர் நடத்துவாய் இளம்பிறை போல்.அதன் விளங்கொளி உருளை விண்வீழ் கொள்ளிபோல் விளைநிலம் படியக் காற்றைப் போலக் கடிது மீள்வோம்; வளையல் நிறைந்த கையுடை இளையளை மாண்புற யான்மணத் துவக்கவே’ இதில் சங்கப்பாடலின் கருத்து உரையின் உதவியின்றி எவரும் எளிதாக அறிந்து கொள்ளும் பாங்கில் அமைந்துள்ளது.

இன்னொரு பாடல்: இஃது ஒக்கூர் மாசாத்தியார் பாடிய குறுந்தொகைப் பாடல் (186). இது தலைவி கூற்றாக வந்தது.

ஆர்கலி யேற்றொடு கார்தலை மணந்த கொல்லைப் புனத்த முல்லை மென்கொடி எயிறென முகைக்கு நாடற்குத் துயில்துறந்தனவால் தோழிஎன் கண்ணே

1. பாதா.க. தொகுதி-2 பக்கம் 65