பக்கம்:பாவேந்தரின் பாட்டுத்திறன்.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவேந்தர் நடையில் சங்கப் பாடல்கள் 225 அதற்கு மறுமொழியாக தோழனே. ஒரு மங்கையின் நெற்றியழகு என் உள்ளத்தைப் பிணித்தது” என்கின்றான்.

இந்தக் கருத்துடைய சங்கப்பாடலை எளிய நடையில் அமைத்து எல்லோரும் எளிதாய்க் கற்க வழியமைக்கின்றார் பாவேந்தர்.

வாட்டம் ஏன் என்று கேட்க பாங்கனே கேட்டண்ட் டாம்பிறை கடலில் கினைத்தல்போல் கரிய கூந்தல் அருகில் தோன்றிய ஒருத்தியின் நெற்றி பிணித்தது - என் கருத்தோ கடிது பிடிபட்ட யானையே’ மற்றொரு பாடல்: இது குறுந்தொகையில் (133) உறையூர் முதுகண்ணன் சாத்தனார் அமைத்த தலைவி கூற்றாக வருவது

புனவன் துடவைப் பொன்போற் சிறுதினை கிளிகுறைத் துண்ட கூழை யிருவி பெரும்பெயல் உண்மையின் இலையொலித் தாங்கென் உளஞ்செத்தும் உளனே தோழியென் நலம்புதி துண்ட புலம்பி னானே. விளக்கம்: இயற்கைப் புணர்ச்சிக்குப்பின் தலைவன் தலைவியை மணந்து கொள்ளாமல் நெடுங்காலம் போக்குகின்றான். இதனால் வருத்தம் அடைந்த தலைவி. “குறவனுக்கு உரிய தோட்டத்தில் விளைந்த பொன்போன்ற சிறிய தினையின் கதிரை கிளி ஒடித்து உண்ணுதலால் கூழையான தாளில் பெருமழை உண்டானமையால், இலைதளைத்தல் போல, என் நலத்தைப் புதிதுண்டமையால் உண்டான தனிமை வருத்தத்தோடு, எனது வலி அழிந்தும் உயிருடன் உள்ளேன். தலைவர் அருள் செய்வார் என்ற நம்பிக்கையுடன் இருக்கின்றேன்” என்கின்றாள்.

இக்கருத்தடங்கிய குறுந்தொகைப் பாடலை எளிமையாக்கிய பாவேந்தரின் பாடல்

கிளிஉண்டதனால் கதிரிழந்து கிடந்த தினைத்தாள் செத்துப் போகாது நல்ல

3. காதல் பாடல்கள்- பக்கம் 127