பக்கம்:பாவேந்தரின் பாட்டுத்திறன்.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

226 பாவேந்தரின் பாட்டுத்திறன்

மழைவர இலைவிட்டதுபோ லேஎன் புதுநலம் உண்டாதற் போகும்னன் நல்லுயிர், வருவார் என்னும் நினைவால் இருந்தது தோழி என்றாள் தலைவியே”

வேறொரு பாடல்: இது குறுந்தொகையில் (124 பாலை பாடிய பெருங்கடுங்கோவால் தோழியின் கூற்றாக அமைந்தது. உமணர் சேர்ந்து கழித்த மருங்கி னகன்றலை ஊர்பாழ்த் தன்ன வோமையம் பெருங்காடு இன்னா வென்றி ராயின் இனியவோ பெரும தமியோர்க்கு மனையே

விளக்கம்: தலைவியை விட்டுத் தனியே செல்ல விரும்புகின்றான் தலைவன். “பாலைநிலம் இவள் வருவதற்கு உரிய தன்று. இன்னாமையுடையது” என்று கூறுகின்றான்.இதனைக் கேட்ட தோழி, தலைவரைப் பிரிந்தாருக்கு வீடு மட்டும் இனிமையாக இருக்குமா? என்று எதிர் வினா எழுப்பித் தலைவியை உடன் கொண்டு ஏகும்படி வேண்டுகின்றாள்.

இக்கருத்தடங்கிய எளிதாக அமைத்த பாவேந்தரின் பாடல்:

உயிரே பிரித்தால் உடல்வாழாது வெயில்துதல், அயல்விழி, வெண்ணிலா முகத்து நேரிழை தனையும் நீர்அழைத் தேகுக என்றேன் நீஅதற்கு இயம்பிய தென்ன? உப்புவாணிகர் ஒன்றிப் புரிந்த வெப்பு நிலம்போல் விரிச்சென்ற ஊர்போல் இருக்கும் பாலை நிலத்தில் என்னுடன் மருக்கொழுந்தும் வருவதோ என்று தனியே செல்வதாய் சாற்றினிர் உம்மை மாது பிரிந்து வாழும் வீடுதான் இனிதோ சொல்க என்று துனிபொறாது சொன்னாள் தோழியே’

(துனி - துன்பம்) 4. காதல் பாடல்கள் பக்கம் 128 5. காதல் பாடல்கள் - பக்கம் 118