பக்கம்:பாவேந்தரின் பாட்டுத்திறன்.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடல்கள் பகரும் செய்திகள் Y 233

இயல் - 12

பாடல்கள் பகரும் செய்திகள் (Messages)

கவிஞனின் மனத்தில் தோன்றிய அநுபவமே கவிதையாக

முகிழ்க்கின்றது; வடிவம் கொள்ளுகின்றது. கவிதையைப் படிக்கும் நாமும் அக்கவிஞன் பெற்ற அநுபவத்தையே பெற்றுவிட்டால், கவிதையும் உணர்த்த வேண்டியவற்றை உணர்த்திவிடும் நிலையை அடைந்து விடுகின்றது. பாரதியாரைப் போல பாவேந்தரும் இலக்கணக் கவி அல்லர் இருவரும் ஆவேசக் கவிஞர்கள். பண்டைய கவிதைகளும் பிற்காலக் கவிதைகளும் உள்ளத்தை மகிழ்வித்து வந்தன; வருகின்றன. ஆனால், பாரதிதாசனின் கவிதைகள் நாட்டின், சமூகத்தின், மக்களின் உயிரை மகிழ்விக்கும் ஆற்றல் வாய்ந்தவை என்று கூறி மகிழ்வர் நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டார் அவர்கள். பாவேந்தரின் பெரும்பாலான கவிதைகள் பிரசார நோக்கத்தை யுடையவையாதலால் சில பாடல்களில் வசையானது விசையாக வந்து விழுகின்றது; சினத்தியை மூட்டிவிடுகின்றது. நெளிந்து புரளும் வசை மொழிகளையும் பின்னே கொதித்து எழுந்து துணிவு அளிக்கும் வீரச் சொற்களையும் பொறிமத்தாப்புபோல் பொழிந்து தள்ளுவதில் பாரதிக்குப்பின் பாரதிதாசன் ஒருவரே இருந்தார் என்று சொல்லலாம். கவிஞர் வாலி சொல்லுவார்:

தமிழனின் r

விழிப் பூட்டைத்

திறந்தது

அவனது

மொழிச் சாவியே.

சமூகக் குதிரையின்

சண்டித் தனத்தைச்

சரிப்படுத்த -