பக்கம்:பாவேந்தரின் பாட்டுத்திறன்.pdf/252

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

236 பாவேந்தரின் பாட்டுத்திறன்

எவர்தாம் இதுவரை சொல்ல ? சொன்னார் பெரியார் என்பது மட்டுமா? செய்தார் பெரியார் செய்வார் பெரியார் என்பதில் இம்மியும் பொய்ம்மை உண்டா?”

என்றும்,

தமிழன்மனம் தவிடுபொடி ஆகையில் வாழாது வாழ்ந்தவன் வடுசுமந்து சாகையில் “ஆ” என்று துள்ளி மார்பு தட்டிச் சாவொன்று வாழ்வொன்று பார்ப்போம் என்று பார்ப்பனக் கோட்டையை நோக்கியே அருஞ்செயல் செய்வார் அல்லால் பெரியார் எவர்?நம் பெரியார் வாழ்கவே என்றும் பேசுவர். “பெரியார் போர் வெல்லும்” என்ற தலைப்பில்,

ஆதிப் பெருமை பெரியாரை அல்லால் தமிழருக்களிப்பவர் வேறெவர் உள்ளார்?

அம்மியா காவேரி ஆற்றுக்குத் தெப்பம்? பெரியார் அடிச்சுவடு நன்மை பயக்கும்

பெரியார் தொடங்கிய போர்ஒன்றே வெல்லும்” என்று போற்றிப் புகழ்வர்.

இன்னொரு பாடலில் பெரியாரின் கொள்கையினைக் குறிப்பிடும் பாங்கில்,

மக்கள் வாழும் உலகினில்

மரங்கள் சாதி வேற்றுமை சுக்கு நூறாய் ஆக்கிய

தூய பெரியார் முகமென

4. வேங்கையே எழுக! - பக்கம் 54 5. வேங்கையே எழுக! - பக்கம் 49 6. வேங்கையே எழுக! - பக்கம் 50