பக்கம்:பாவேந்தரின் பாட்டுத்திறன்.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

238 பாவேந்தரின் பாட்டுத்திறன்

தில்லி எலிக்கு வான்ப ருந்து தெற்குத் தினவின் படைமருந்து கல்லா ருக்கும் கலைவி ருந்து கற்ற வர்க்கும் வண்ணச் சிந்து:

கரண்டு கின்ற வடக்க ருக்குச் சூழ்அறுக்கும் பனங்க ருக்கு! மருண்டு வாழும் தமிழருக்கு வாழ வைக்கும் அருட்பெருக்கு:

தொண்டு செய்து பழுத்த பழம் தூய தாடி மார்பில் விழும் மண்டைச் சுரப்பை உலகு தொழும் மனக்கு கையில் சிறுத்தை எழும்!

தமிழர் தவம்கொடுத்த நன்கொடை தன்மானம்பாயும்தலை மேடை தமக்குத் தாண்டி வந்த வாட்படை நமைஅவரின் போருக் கொப்படை!”

அன்புமக்கள் கடலின்மீது அறிவுத்தேக்கம் தங்கத்தேரில் பெரியாரை ஏற்றி நமக்குக் காட்டுவார்.

“ஓம் நமோ நாராயணாய” என்ற திருமந்திரத்தை அதுசந்திக்காத நாளும், “தொழுது முப்போதும் உன்னடி வணங்கித் தூமலர் துய்த்தொழுது ஏத்தப்பெறாத நாளுமே அடியேனுக்கு உண்ணா நாள். இவ்விரண்டும் அடியேனுக்கு வாய்க்கப்பெற்ற நாள்தான் உண்டு களிக்கப் பெற்ற நாளாகும்” என்றார் விட்டுணு சித்தன் என்ற வைணவப் பெரியார்”. அவ்வாறே நாவுக்கரசர் பெருமான் “பெரும்பற்றப் புலியூரானைப் பேசாத நாளெல்லாம் பிறவாநாளே” என்பார். பெரியார் பக்திக்கு நம் கவிஞர் பெருமான் சிறிதும் குறைந்தவர் அல்லர்."தந்தை பெரியார் பெருமையைப் பேசாத நாளெல்லாம் பிறவா நாளே” என்று கொண்டவராகக் கருதலாம். 10. புகழ் மலர்கள் பக்கம்50 11. பெரியாழ் - திரு. 5.7:6 12. அப்பர் தேவாரம் 6.1