பக்கம்:பாவேந்தரின் பாட்டுத்திறன்.pdf/256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

240 V பாவேந்தரின் பாட்டுத்திறன்

தமிழகம் தமிழுக்குத் தகுஉயர்வு அளிக்கும் தலைவனை எண்ணித் தவங்கிடக் கையில் இலகு பாரதிப் புலவன் தோன்றினான் என்று வளரும் தமிழையும் புதுமைபடைக்கும் பாரதியையும் இணைத்துக் காட்டுவர் பாவேந்தர்.

பாரதியார் உலககவி!- அகத்தில் அன்பும்

பரந்துயர்ந்த அறிவினிலே ஒளியும் வாய்ந்தோர்: ஒருருக்கொருநாட்டுக் குரிய தான

ஒட்டைச்சாண் நினைப்புடையர் அல்லர், மற்றும் வீரரவர் மக்களிலே மேல்கீழ் என்று

உள்ளுவதைக் கிள்ளிவிட வேண்டும் என்போர்!” என்று அவரிடம் கண்ட பொதுத் தன்மையின் பாங்கைக் காட்டுவார். புதுமைக்கவி பாரதியார் புதுவைக் குயில் பாவேந்தரின் உள்ளத்தில் எத்தகைய இடத்தைப் பெற்றிருந்தார் என்று காட்டும் பாடற்பகுதி:

பைந்தமிழ்த் தேர்ப்பாகன் அவனொரு செந்தமிழ்த் தேனி, சிந்துக்குத் தந்தை! குவிக்கும் கவிதைக் குயில் இந் நாட்டினைக் கவிக்கும் பகையைக் கவிழ்க்கும் கவிமுரசு! திடுதுயில் நீக்கப் பாடிவந்த காடு கமழும் கற்பூரச் சொற்கோ: கற்பனை ஊற்றாம் கவிதையின் புதையல்: திறம்பாடவந்த மறவன் புதிய அறம்பாடவந்த அறிஞன், நாட்டிற் படரும் சாதிப் படைக்கு மருந்து! மண்டும் மதங்கள் அண்டா நெருப்பவன்! அயலார் எதிர்ப்புக் கணையா விளக்கவன்!” அற்புதமான சொல்லோவியம் இது. இன்னும்,

வாளேந்தும் மன்னர்களும் மானியங்கொள்

புலவர்களும் மகிழ்வாய் அந்நாள் 16. பா.தா.க. தொகுதி-2- மகாகவி பக்கம் 82 17. பாதா.க. தொகுதி-2- புதுநெறி காட்டிய புலவன்- பக்கம் 72-73