பக்கம்:பாவேந்தரின் பாட்டுத்திறன்.pdf/257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடல்கள் பகரும் செய்திகள் Y 241 தாளேந்திக் காத்தநறுந் தமிழ்மொழியைத்

தாய்மொழியை உயிரை இந்த நாளேந்திக் காக்குநர்யார்? நண்ணுணர்யார்?

எனஅயலார் நகைக்கும் போதில் தோளேந்திக் காத்தஎழில் சுப்ரமண்ய

பாரதியார் நாமம் வாழ்க!

எல்லையற்ற ஆதரவும் பொருள்வலியும் இயைந்திருந்த ஷேக்ஸ்பீயாரும் சொல்லும் விக்டர்உய்கோவும் ரவீந்திரனும்

டால்ஸ்டாயும் சொந்த நாட்டில் நல்லசெயல் செய்தார்கள் நடைப்பினங்கள்

மத்தியிலே வறுமை என்னும் தொல்லையிலும் தொண்டுசெய்த சுப்ரமண்ய

பாரதியார் நாமம் வாழ்க!

பழங்கவிகள் படிப்பதற்கோ பழம்படிப்பும்

பெரியாரின் துணையும் வேண்டும் விழுங்குணவை விழுங்குவதற்கோ தமிழருக்கு

ஊக்க மில்லை கட்டாயத்தால் வழங்குவதற்கோ ஆட்சியில்லை தெளிதமிழில்

சுவைக்கவியில் மனத்தை அள்ளித் தொழும் பகற்றும் வகைதந்த சுப்ரமண்ய

பாரதியார் நாமம் வாழ்க!” என்று புகழ்மாலை சூட்டுவதைக் காணலாம். இப்படிப் பாடிப் பரவின இடங்கள் பலப்பல. இது சீடர் குருவைப் போற்றும் செய்தியாகும்.

தொண்டர் சீர் பரப்புதல்: திருத்தொண்டர் தொகை பாடி அடியார்கள் (சைவ அடியார்கள்) வழிபாட்டிற்கு வித்திட்டவர் கந்தர மூர்த்தி சுவாமிகள். நம்பியாண்டார் நம்பியின் திருத்தொண்டர் அந்தாதியாக இவ்வழிபாடு ஒரிரு இலைகளைவிட்டுச் சிறு செடியாக வளர்ந்தது. சேக்கிழார் பெருமான் இந்த வரலாற்றை தாம் இயற்றிய திருத்தொண்ட்ரிபுராணம் எனப்படும் பெரிய புராணத்தால் ஆல்போல்

18. புகழ் மலர்கள்- பக்கம் 139