பக்கம்:பாவேந்தரின் பாட்டுத்திறன்.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

242 பாவேந்தரின் பாட்டுத்திறன்

கிளைகளாய் கொப்புகளாய்த் தழைத்து அருகுபோல் வேரூன்றத் செய்தார். இந்த மூன்று நிகழ்ச்சிகளும் பாரதியாரின் உள்ளத்தில் ஆழப் பதிந்திருத்தல் வேண்டும். ஆகவே அவர் பல சந்தர்ப்பங்களில் தேசத் தொண்டர்களாகிய காந்தியடிகள், தாதாபாய் நவ்ரோஜி, திலகர்,லாலா லஜபதிராய், வ.உ.சிதம்பரம் பிள்ளை போன்றவர்களைப் பாடிப் போற்றினார். பாரதியாரைத் தொடர்ந்து கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை வாழ்த்துப்பாடல்களாகவும் இரங்கற்பாக்களாகவும் பல தொண்டர்களைப் பாடிப் போற்றினார். இவர்தம் பாடல்களில்” தேசத் தொண்டர்கள், கவிஞர்கள், வள்ளல்கள், இசையரசுகள் போன்ற பல பெரியார்கள் இடம் பெற்றுள்ளனர்.

இவர்கள் யாவரும் பாவேந்தருக்குத், தொண்டர்களைப் போற்றுவதில் முன்னோடிகளாக அமைந்தனர்.இவர்தம் பாடல்களில் உலகப் பெரியார்களான, தந்தை பெரியார், அண்ணல் காந்தியடிகள் போன்றவர்களும், ஒமந்துாரார், காமராசர், வ.உ. சிதம்பரனார், வா.வெ.சு.அய்யர்,டாக்டர் சுப்பராயன்,நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை ஆகிய தேசத் தொண்டர்களும், சர்.ஏ.இராமசாமி முதலியார், கே.எம். பாலசுப்பிரமணியம், டாக்டர் அம்பேத்கார், “சண்டே அப்செர்வர்” பி. பாலசுப்பிரமணியம் போன்ற அறிஞர்களும், ப. சீவானந்தம் (பின்னர் இவர் பொதுவுடைமை வாதியாக மாறினவர்), பட்டுக்கோட்டை தளபதி அழகிரி, புதுக்கோட்டை வல்லத்தரசு, சர் பன்னீர் செல்வம், எஸ். இராமநாதன், அண்ணல் தங்கோ, உடையார் பாளையம் வேலாயுதம் போன்ற திராவிட இயக்கத் தொண்டர்களும்; “செகவீர பாண்டியன், யாழ்நூல் தந்த விபுலானந்த அடிகள், மயிலை சீனி வேங்கடசாமி, வெள்ளை வாரணனார், வெ.ப.கரு இராமநாதன் செட்டியார், சதாசிவ பண்டாரத்தார், பசுமலை நாவலர் சோம சுந்தர பாரதியார், திரு.வி.க, ந.சி. கந்தையா, நீ. கந்தசாமி பிள்ளை, ஒளவை துரைசாமி பிள்ளை, விபுலானந்த அடிகள், சக்கரவர்த்தி நாயனார் பொன்னம்பலனார், இ.மு. சுப்பிரமணிய பிள்ளை, கா. அப்பாதுரையார் ஆகிய புலவர் பெருமக்களும்; இராசா சர் அண்ணாமலை செட்டியார் முத்தையவேள், பவாநந்தம் பிள்ளை ஆகிய வள்ளல்களும்; தமிழ்

19. மலரும் மாலையும் - என்ற நூலில் காண்க.