பக்கம்:பாவேந்தரின் பாட்டுத்திறன்.pdf/259

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடல்கள் பகரும் செய்திகள் 243

வெளியீட்டாளர்களான வ. சுப்பையா பிள்ளை, பாரி செல்லப்பன், தமிழ்வாணன் ஆகியோரும்; கலைவாணர் என்.எஸ். கிருட்டிணன், மக்கள் திலகம் எம்.ஜி. இராமச்சந்திரன், நடிகமணி விசுவநாத தாக ஆகிய நடிகர் பெருமக்களும் இசையரசர் முத்தமிழ் இலக்குவனாரும்; பட உற்பத்தியாளர் ஏ.கே. வேலனும், தி.மு. நாராயணசாமி பிள்ளை, டாக்டர் மணவாள ராமாநுஜம் ஆகிய இரண்டு துணை வேந்தர்களும்: பதிவாளர் T.D. மீனாட்சி சுந்தரனாரும் தொழில் விற்பன்னர் ஜி.டி. நாயுடுவும், தமிழுக்கு உயிர் தந்தநடராசனும் கவிஞரின் புகழுரைக்கு இலக்காகிப் பாடல்களில் இடம் பெற்றுள்ளனர். இரஷ்யநாட்டு நிக்கோலாய் லெனின் கூட இவர் பாடலில் இடம் பெற்றுத் திகழ்கின்றார்”

தளராத தமிழ் ஆர்வம் என்றும் தளராத தமிழ் ஆர்வம் மிக்கவர் நம் பாவேந்தர். உடலை வளர்ப்பது உணவு உயிரை வளர்ப்பது தமிழ் என்ற கொள்கைப் பிடிப்புள்ளவர், பாவேந்தர் பாக்களில் இடறிவிழும் இடங்களிலெல்லாம் இந்தக் கொள்கை நாடியைக் கண்டு உணரலாம்.

செந்நெல் மாற்றிய சோறும் - பசுதெய் தேக்கிய கறியின் வகையும், தன்னிகர் தானியம் முதிரை - கட்டித் தயிரொடு மிளகின் சாறும், தன்மதுரஞ்செய் கிழங்கு - கானில் நாவிலி னித்திடும் அப்பம், உன்னை வளர்ப்பன தமிழா உயிரை உணர்வை வளர்ப்பது தமிழே: என்றும்,

தமிழுக்கும் அமுதென்று பேர் - அந்தத் தமிழ் இன்பத் தமிழ்ளங்கள் உயிருக்கு தேர்’

என்றும் இயம்புவதால் இவற்றைத் தெளியலாம்.

20. “புகழ் மலர்கள் என்ற நூலில் காண்க : - 21. பாதா. கவிதைகள் முதல் தொகுதி - தமிழின் U B 22. பாதா.கவிதைகள் முதல் தொகுதி-இன்பத்தமிழ்-1-பக்கம் 39.

17