உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவேந்தரின் பாட்டுத்திறன்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 பாவேந்தரின் பாட்டுத்திறன்

பாவேந்தரின் குருநாதர் பாரதியார்,

பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான் புவி பேணி வளர்த்திடும் ஈசன்” என்று பெண்மையைப் போற்றுவார். அவர்தம் அருமைச் சீடர் பாவேந்தர், பெண்ணை வீட்டின் விளக்காக்குவார், குடும்ப விணக்காகப் போற்றுவார். இந்தப் பெண் குழந்தையாக இருக்கும்போதே, தாலாட்டுப் பாட்டாக:

எல்லாம் கடவுள்செயல் என்று துடைநடுங்கும் பொல்லாங்கு தீர்ந்தும் புதுமைசெய வந்தவளே வாயில்இட்டுத் தொப்பை வளர்க்கும் சதிக்கிடங்கைக் கோயில்என்று காசுதரும் கொள்கை தவிர்ப்பவளே சாணிக்குப் பொட்டிட்டுச் சாமி.என்.பார் செய்கைக்கு தாணி உறங்கு நகைத்துநீ கண்ணுறங்கு”

என்றுவாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல கடவுள் கொள்கையைச் சாடுகின்றார்.

அடுத்து, முத்தாய்ப்பாக,

கடவுள் கடவுள் என்றெதற்கும் கதறுகின்ற மனிதர்காள்! கடவுன் என்ற தாமதேயம் கழறிடாத தாளிலும் உடைமை யாவும் பொதுமையாக

உலகுதன்று வாழ்ந்ததாம்; ‘கடையர் செல்வர் என்ற தொல்லை

கடவுன்பேர் இழைத்ததே” கடவுளை நம்பினவர்கள் அனைவரும் கைவிடப்பட்டனர் என்று பட்டியலிட்டுக் காட்டும் கவிஞர்,

1. பாக, பல வகைப்பாடல்கள்,முரசு.9 12. யாதா.க.முதல் தொகுதி-பக்கம் 128 .ே பாதாக தொகுதி. 1. பக்கம் 133