பக்கம்:பாவேந்தரின் பாட்டுத்திறன்.pdf/260

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

244 Y பாவேந்தரின் பாட்டுத்திறன்

தாயின்மேல் ஆணை: தந்தைமேல் ஆணை!

தமிழகமேல் ஆணை தூயவன் தமிழ்மேல் ஆணையிட்டேநான்

தோழரே உரைக்கின்றேன் தமிழரின் மேன்மையை இகழ்ந்த வரைஎன்

தாய்தடுத் தாலும் விடேன் எமைநத்து வாயென எதிரிகள் கோடி இட்டழைத்தாலும் தொடேன்’ இதில் ஒவ்வொரு தமிழரும் தமிழ்ப் பகைவர்களை அழிக்க எவ்வாறு ஆணையிடுதல் வேண்டும் என்பது பாவேந்தர் பகர்வதால் அவரது ஆர்வம் அடிமனத்திலிருந்து கிளம்புவதைக் காணலாம்.

இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர் விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்’ என்பார் “தமிழ்விடு தூது’ என்ற நூலின் ஆசிரியர். ஆனால், நம் பாவேந்தர் தரும் பொருள்,

“கன்னற் பொருள்தரும் தமிழே நீ ஓர் பூக்காடு நானோர் தும்பி” என்று தமிழில் என்றும் நீங்காமல் தோய்ந்திருப்பதாகக் கூறுகின்றார்.

உண்ணும் சோறு பருகும்நீர்

தின்னும் வெற்றிலையும்

எல்லாம் கண்ணன்’ என்று தனக்கு எல்லாம் கண்ணன் என்பதாகக் கூறுவார் நம்மாழ்வார். இந்தப் பாணியில் பாவேந்தரும்

உண்ணும் உணவும் பருகும் நீரும் தமிழே தமிழே, சாவா மருந்து தேனின் இனிமை செழுமலரின் மணம்’

23. இசையமுது- தொகுதி - 1 பக்கம் 41 24. தமிழ்விடுதூது - கண்ணி. 70 25. அழகின் சிரிப்பு. தமிழ் - பக்கம் 60 26. திருவாய் 6.7:9 27. வேங்கையே எழுக! - பக்கம் 111