பக்கம்:பாவேந்தரின் பாட்டுத்திறன்.pdf/261

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடல்கள் கரும் செய்திகள் 245

என்பார். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்றும் உயிருக்குமேல் மதிப்புடையதாகத் தோன்றும். பாரதியாருக்கு எல்லாம் சக்தி மயமாகத் தோன்றவில்லையா?

மொழிவழிச் சிந்தனை: எந்த நடைமுறைக் கல்வித் திட்டமானாலும் பாவேந்தரின் மொழிவழிச் சிந்தனைகள் அதில் பொருந்துமாறு அமைந்திருப்பதை அவர்தம் பாடல்களின்மூலம் அறிய முடிகின்றது. மாணாக்கர்கட்குத் தமிழ்மொழி (தாய்மொழி - பிராந்திய மொழி) பயிற்று மொழியாக - பாட மொழியாக இருத்தல் வேண்டும் என்பது அறிஞர் கண்ட உண்மை. காந்தியடிகள், இராஜாஜி, தி.க. அவினாசிலிங்கம், சி.சுப்பிரமணியம் போன்றநாட்டு முன்னேற்றத்தை நாடும் அரசியல் தலைவர்கள் இந்த உண்மையை மந்திரம் போல் பன்னிப்பன்னி உரைத்து வந்துள்ளனர்; செயற்படுத்தியும் வந்துள்ளனர். திராவிடர் ஆட்சியில் இஃது என்றுமில்லாத வேகத்தில் செயற்பட்டு வருகின்றது. புட்டிப்பாலை விடத் தாய்ப்பால் உயர்ந்த தன்றோ? ஆங்கிலத்தின் மூலம் கற்ற சர் சி.வி. இராமன், சர் ஜே.சி. போஸ், விசுவேசுவரய்யா போன்ற அறிவியலறிஞர்களும் தோன்றத்தான் செய்தனர். இன்று நம் நாட்டில் பணியாற்றும் எண்ணற்ற அறிவியலறிஞர்கள் யாவரும் ஆங்கிலமொழி வழியாகக் கல்வி கற்றவர்களே. ஆங்கிலத்தின்மூலம் கல்விகற்பதால் அறவே பயன் இல்லை என்று சொல்லமுடியாது. இவர் இலக்கியத்தை அதிகமாக வற்புறுத்தாமல் மொழியை மட்டிலும் நன்முறையில் கற்பித்தால் பிறதுறை அறிவுச் செல்வத்தைப் பெறுவதற்குப் போதுமானது.

தாய்மொழிமூலம் கற்றால் அது கற்போரின் சிந்தனை வளர்ச்சிக்குப் பெருந்துணை புரியும் என்பதில் இருவேறு கருத்துகள் இருக்க முடியாது. சிந்தனையை மிகுவிக்கும் ஆற்றல் தாய்மொழிக்கு மட்டிலுமே உண்டு. “தாய்மொழியே சிந்தனைக்கு மலையூற்றாகும்” என்பது கவிஞரின் கூற்று. தாய்மொழியைவிட அதிக ஆர்வத்துடன் கற்கும் அயல்மொழியாலும் சிந்தனை வளர்வதற்கு எதுவுண்டு என்ற

28. வேங்கையே எழுக! - பக்கம் 100