பக்கம்:பாவேந்தரின் பாட்டுத்திறன்.pdf/265

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடல்கள் பகரும் செய்திகள் 249 என்று இருமொழிக் கொள்கையை ஆதரிப்பதையும் காணலாம். இன்னும்,

எங்கும் எதிலுமே தமிழமுதுாட்டு இங்கிலீசை இந்தியை

இடமிலா தோட்டு” என்றும்,

தாய்மொழியே கண்கள் தழுவும் மொழிகள் புண்கள்”

என்றும் கூறியுள்ளவை அவர்தம் மொழிக்கொள்கை குழம்பியிருந்த காலத்தில் எழுந்தவை என்று கருதலாம். உலகியலுக்கும். சூழ்நிலைக்கும், நடைமுறைக்கும், நீள்நோக்கிற்கும் ஏற்றவாறு நாம் மாறிக்கொள்ள வேண்டும் என்பது உண்மையல்லவா ? முன்னேற்றத்திற்குத் தடையாக இருப்பதை மாற்றிக்கொள்ள வேண்டுமன்றோ?

தன்னைக் காத்துக்கொள்ளும் திறம் தமிழுக்குண்டு என்பதை மூன்று கவிதைகளால் புலப்படுத்துகின்றார்.

+. வடக்கினில் தமிழர் வாழ்வை

வதக்கிப்,பின் தெற்குல் வந்தே இடக்கினைச் செயநினைத்த

எதிரியை, அந்நாள் தொட்டே “அடக்கடா” என்று ரைத்த

அறங்காக்கும் தமிழே: இங்குத் தடைக்கற்கள் உண்டென்றாலும்

தடந்தோளுண் டெனச்சிரித்தாய்! இது பகைக்கஞ்சாத் தமிழ்.

37. வேங்கையே எழுக! - பக்கம் 98 38. வேங்கையே எழுக! - பக்கம் 96