பக்கம்:பாவேந்தரின் பாட்டுத்திறன்.pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

250 Y பாவேந்தரின் பாட்டுத்திறன் 2. ஆளுவோர்க் காட்பட் டேனும்

அரசியல் தலைமை கொள்ள நாளுமே முயன்றார் தீயோர்: தமிழேநீ நடுங்க வில்லை! “வாளினை எடுங்கள் சாதி

மதம்இல்லை! தமிழர் பெற்ற காளைகள்” என்றாய்; காதில்

கடல்முழக்கத்தைக் கேட்டாய்! இது வெற்றித் தமிழ்.

3. இருளினை வறுமை நோயை

இடறுவேன்; என்னு டல்மேல் உருள்கின்ற பகைக்குன், றைநான் ஒருவனே உதிர்ப்பேன்; நீயோ கடுமான்செய் படையின் வீடு!

நான் அங்கோர் மறவன்!” இது படைத்தமிழ்.

இந்தி எதிர்ப்பு: அனைத்திந்திய மட்டத்தில் இந்தியை எபபடியாவது நுழைத்திட வேண்டும் என்று முயல்கின்றது காங்கிரசு தீங்கரசானதால். தமிழகமே இதனை ஒன்றுபட்டு எதிர்க்கின்றது. இக்கொள்கையை நம் கவிஞரும் முழு மூச்சாக எதிர்ப்பதை அவர்தம் பாடல்களில் கண்டு மகிழலாம்.

விடுதலை பெறுவதற்கு ஏழு திங்களுக்கு முன்னரே கவிஞர் “பொது நலம்” என்ற இதழில் (15147) எழுதினார்.

எண்ணிலா வீரர்கள் எண்ணிலாத் தீரர்கள் கண்ணிர் செந்நீர் களங்கண்ட தன்பின் வந்தது விடுதலை, உரிமை பெற்றது

உடல்பொருள் ஆவி உவந்தீந்தவரின் ஈகத்தி னால்தான் எய்தினோம் விடுதலை

39. அழகின் சிரிப்பு - பக்கம் 59, 60