பக்கம்:பாவேந்தரின் பாட்டுத்திறன்.pdf/267

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடல்கள் பகரும் செய்திகள் 251

ஈவதும் பெறுவதும் இல்லை விடுதலை சாவுஆயிரத்தைத் தந்து பெற்றது.

...உயிரை எண்னாக் கடமையர் ஆயிரம் ஆயிரம் பேரை அளித்துப் பெற்ற விடுதலை பித்தர் கையில் சிக்கிக் கொண்டது. திராவிடம் அழியும்: சாதி சமயத்தின் சழக்குகள் மிகுந்திடும்! இனவெறி யாட்டம் பிணந்தின்னியாகும்! மொழிப்போர் மூளலாம், சமதரு மத்தின் விழிதிற வாது, வேற்றுமைச் சிக்கல் மாநிலத் தோறும் வெறுப்பும் பகையும் கால்கொள்ளும்; ஏழை எளியவர் கடுத்துயர் உள்நாட் டவரால் கொள்ளை நோயாகும்.

இவற்றை எப்படி இப்பொழு தேநீர் செப்பலாம்என்று கிளப்பின், ஆட்சி ஒப்பின வரையும் உட்கார்ந்தவரையும் நாற்ப தாண்டாய் நான்நன் கறிவேன் அறியா மையும் செருக்கும் கைகோத்து அரியனை அமர்கையில் அண்ணலே ஒதுங்கினார் உழுதவன் இல்லை விதைத்தவள் இல்லை மக்களுக்குள்ள சிக்கறுக்காமல் எல்லார்க்கும் எல்லாம் என்னும் உரிமை சொல்லால் செயலால் தொடவும் எண்ணிடார் இரவில் வாங்கும் இந்திய விடுதலை என்று விடியுமோ, யார்அறிகுவரே” கவிஞன் எண்ணிக் காட்டிய கற்பனைக் காட்சிகளை இன்று நாம் நேரே காண்கின்றோம். அறியாமையும் செருக்கும் கைகோத்து “அரியணை ஏறினோர் ஒரு பகுதிக்குரிய இந்தி மொழியை எல்லா மாநிலத்திலும் திணிக்க முயல்வது இமாலயத் தவறாகும். சுமார் 40. நாள் மலர்கள் - பக்கம் 83-84. இறுதி அடிகள் இரண்டையும் புதுக்கவிதை படைத்தோர் சிறிது மாற்றத்துடன் அப்படியே ஏற்றுப் படைத்து மகிழ்ந்தனர்.