பக்கம்:பாவேந்தரின் பாட்டுத்திறன்.pdf/270

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

254 v. பாவேந்தரின் பாட்டுத்திறன்

என்று விடுதலை பெற்ற ஒராண்டுக்குள் (குயில் - 15-7-48) இந்த எதிர்ப்புக் குரலை எழுப்ப வேண்டியதாயிற்று மைய அரசின் தறுதலைச் செயலால்:

வருமொழியாம் இந்தியையும் வடநாட்டார் ஆட்சியையும் ஒருநாளும் ஒப்போமென் றதிராயோ முரசே!” என்று இந்தி எதிர்ப்பு முரக கொட்டுகின்றார்.

குமுறும் தமிழ்க் கடலே - இந்தி கொணரும் பகைமேல் எழுவாய்’ என்று கடலாகத்திரண்டிருக்கும் தமிழர்கட்கு எழுச்சியூட்டி எழுப்புகின்றார். இன்னும் இந்தி வந்தால் செந்தமிழின் உயிர் நின்று விடும் என்று உணர்த்துகின்றார்.

தாய்க்குச் சலுகையின்றித்

தாழ்கின்றாள்! இந்தினனும் பேய்க்கு நறுநெய்பால்

பெய்க என்கின்றார் என்தமிழா!

“தமிழழியுமானால்

தமிழர் அழிவர்"- இதை தமைவிழுங்க வந்தவர்கள் நன்கறிவர் என்தமிழா!

தென்றற் பொதியமலை

செந்தமிழ்க்கு மீதியாய் தின்றஉயிர் இந்திவந்தால்

நீங்கிவிடும் என்தமிழா!

தேளுக்கதிகாரம்

சேர்ந்துவிட்டால் தன்கொடுக்கால் வேளைக்கு வேளை

விளையாடும் என்தமிழா!

44. வேங்கையே எழுக! - பக்கம் 78 45. வேங்கையே எழுக! - பக்கம் 79