பக்கம்:பாவேந்தரின் பாட்டுத்திறன்.pdf/276

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

260 பாவேந்தரின் பாட்டுத்திறன் முன்னேற்றப் பாதையில் இயக்கி வருவதையும் காண்கின்றோம். இவ்விடத்தில் ஒரு புராண உண்மையைச் சிந்தித்தால் நமக்குச் சிரிப்புத்தான் வருகிறது. நான்முகன் தன் தேவியை நாவில் வைத்தான்; திருமால் தன் மனைவியை மார்பில் வைத்தான்; பரமசிவன் ஒருத்தியைத் தன் பக்கத்தில் (தையல் பாகன்!) வைத்தான்; மற்றொருத்தியைத் தலையில் தூக்கித் திரிகின்றான். முருகன் தன் தேவிமாரை இரு பக்கங்களிலும் வைத்தான். இதை நினைந்த கம்ப நாடன் சூர்ப்பணகையின் வாக்காக,

பாகத்தில் ஒருவன் வைத்தான்;

பங்கயத் திருந்த பொன்னை ஆகத்தில் ஒருவன் வைத்தான்;

அந்தணன் நாவில் வைத்தான்; மேகத்தில் பிறந்த மின்னை

வென்றதுண் இடையி னாளை மாகத்தோள் வீர பெற்றால்

எங்ஙனம் வைத்து வாழ்தி” (பாகம் - பக்கம் ஒருவன் - சிவன், பங்கயம் - தாமரை,

ஒருவன் - திருமால் ஆகம் - மார்பு அந்தணன் - நான்முகன்; மாகம் - பெரிய வானம்) என்று தன் பாடலில் அமைத்துக் காட்டுவன். இப்படித் தேவர்கள் யாவரும் தம் மனைவிமாரை உரிய இடத்தில் வைத்துப் போற்றியுள்ளனர். மண்ணுலக நிலை என்ன ? இங்கும் அந்த நிலைதான். எல்லோரும் தன் மனைவிமாரை (இரகசியமாகப்) போற்றத்தான் செய்கின்றனர்.சொத்துரிமை மகளிருக்கு இல்லாததால் அரசு சட்டம் இயற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது. பாரதியாரும் பாரதிதாசனும் செய்த பிரசார பலத்தால் எல்லாம் மாறி வருகின்றதைக் காண்கின்றோம். “புதுமைப் பெண்கள்” எங்கனும் தோன்றி வருகின்றனர்.

63. கம், ஆரணி - சூர்ப்பனகை - 76