பக்கம்:பாவேந்தரின் பாட்டுத்திறன்.pdf/277

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடல்கள் பகரும் செய்திகள் 26; முதலாளித்துவ ஆட்சி: அமெரிக்கர் இகோஷிமா நாகசாகி என்னும் இரு நகரங்களின் மீது அணுகுண்டுகள் வீசி அழித்த நிகழ்ச்சிகளைக் கூறும் போக்கில் முதலாளித்துவத்தை அழித்தொழிக்க வேண்டும் என்கின்றார்.

ஒரேஇனம் என்று சொல்லும்

அமெரிக்கர் உருவி னுக்குள் இரோஷிமா நாக சாகி

எரிந்ததே இடிந்த துள்ளம்

ஒருசிலர் அதிகாரத்தின் வல்லரசுரிமை காக்க உலகமே தீக்க டாக்கி

உயிர்க்குலம் அழிக்கும் ஈனர் பலத்தினை ஒடுக்க வேண்டும்; வையப் பாராளு மன்றம் புலம்பலில் பயனே இல்லை

பொகக்குக போர்மூலத்தை! ஜப்பானில் வீழ்ந்த குண்டு

சர்வாதிகார ஆட்டம் இப்பாரை இனிக்க லக்கி

இனிவருங் கால மின்றி தப்பாது செயினும் செய்யும்

தறுதலை முதலாளித்துவம் எப்போதும் நமைவிடாது

செய்வன இன்றே செய்க.” என்று பாடுவர். இதுவும் நமக்குத்தரும் ஒரு செய்தியாக அமைகின்றது. பொதுவுடைமைக் கொள்கை: இக்கொள்கையுடையவர் கவிஞர் என்பதைப் பல பாடல்கள் ஒளிவிட்டுக் காட்டுகின்றன. இதன் விளக்கத்தை எனது இன்னோர் நூலில் காணலாம்.”

64. நாள் மலர்கள் - பக்கம் 123 - 24 65. பாரதிதாசன் - ஒரு கண்ணோட்டம் (தேன் மழை வெளியீடு இயல் 9

(புதியதோர் உலகம்) காண்க,