பக்கம்:பாவேந்தரின் பாட்டுத்திறன்.pdf/280

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

264 பாவேந்தரின் பாட்டுத்திறன்

இக்கொள்கை பேசப்படுகின்றது. இவையெல்லாம். இப்படிக் கவிஞரின் கற்பனையில் அமைந்த பொதுவுடைமைக் கற்பனை அரசியல் (Utopia) எப்படி எப்படியெல்லாம் நிர்வகிக்கப்பட வேண்டும் என்று பல இடங்களிலும் பேசப்பெற்றவை.

இன்றைய நிலை என்ன? எழுபது ஆண்டுகட்குப் பிறகு இம்முறை அரசு வேண்டாம் என்று மக்கள் கிளர்ந்து எழுந்தனர். புதியமுறை அரசு அமைக்க முயன்று வருகின்றனர். “பொதுவுடைமை அரசு” இனி ஒர் எடுத்துக்காட்டாக இராது என்கின்றனர். பொதுவுடைமை என்பது ஒர் “அழகான கருத்து, அது நடைமுறைக்கு என்றுமே ஒத்துவராது, நமது மண்ணில் நடைபெற்ற இந்தச் சோதனை நமது மக்களுக்குத் துயரமாக (Tragedy) அமைந்தது” என்கின்றார் ‘போரிஸ் எல்ட்சின். “பொதுவுடைமை என்ற வரலாற்றுச் சோதனை தோல்வியடைந்தது; அஃது ஒர் முன் மாதிரியன்று என்று முடிந்த முடிவாகக் கூறவேண்டியதாயிற்று; இது நம்நாட்டு மக்களுக்கு மட்டுமல்ல, மக்களுள் எல்லோருக்குமே ஒரு படிப்பினையாகவும் உள்ளது” என்று கூறுவார் மைக்கேல் கோர்பெச்செவ். இனி, வருங்கால இரஷ்யக் குடியரசு (Democracy) எவ்வாறு அமையும்? அஃது எப்படி நடைமுறைப்படுத்தப்படும்? என்பவற்றை உலகம் அக்கறையாகக் கவனிக்க வேண்டும்.” இந்நிலைக்கு ஒரு விளக்கம் கூறப்படும். சைவ சித்தாந்தக் கொள்கைப்படி ஆணவ மலத்தின் திருவிளையாடல் இது ஆணவம், பணபலம், அதிகாரம், உடல்பலம், கல்விமேம்பாடு இவை மிகையாக ஏற்பட்டுவிட்டால் இதன் பரிமாணம் தெரியும். செய்பவருக்கு இவையெல்லாம் சரியாகவே தோன்றும். இருள்மலம் அல்லவா? இன்று மத்திய-மாநில கட்சித் தலைவர்களிடம் இதன் செயற்பாடுகளைத் தெளிவாகக் காணலாம்.

பாவேந்தரின் பாடல்களைப் பயில்வோரின் மனத்தில் இத்தகைய செய்திகளின் தாக்கம் இருக்கும். அவரவர் மனநிலைகட்கேற்ப இவை அவரவர்களின் உள்ளத்தைத் தொடும்.

td:

%v

71. இந்து நாளிதழில் (7.9.9) - அமெரிக்க எ.பி.சி. தொலைக்காட்சியில் தனிச்

சிறப்புடைய பேட்டியில் வெளியான செய்தி.