பக்கம்:பாவேந்தரின் பாட்டுத்திறன்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 v. பாவேந்தரின்பாட்டுத்தின்

கண்ணுண்ண உண்ணக் கருத்தினி லின்பக் கடல்வத்து பாய்ந்திடுதே’ எள்பவையும் வானைப்பற்றியவையே. இங்ஙனம் வான் பாடு பொருளாக அமைகின்றது.

(ஆ) ஞாயிறு ஞாயிறு பற்றி இரண்டு பாடல்கள்:

ஒளிப்பொருள் நீ! நீ ஞானத் தொருபொருள் வாராய்! களிப்பினில் கூத்தைச் சேர்க்கும்

கனற்பொருளே ஆழ நீரில் வெளிப்பட எழுந்தாய் ஒகோ

விண்னெலாம் பொன்னை அள்ளித் தெளிக்கின்றாய்; கடலிற் பொங்கும்

திரையெலாம் ஒளியாய்ச் செய்தாய்.”

கடலின் மேலே தோன்றி - நீ

காலைப் பொழுதைச் செய்வாய் நடுவானத்தில் நின்று - நீ

தண்பகல் தன்னைச் செய்வாய் கொடிமேல் முல்லை மணக்கும் - நல்

குளிர்ந்த தென்றல் வீசும் படிநீ மாலைப் போதைப் - பின்

பரிவாய்ச் செய்வாய் வாழ்க’ - என்பவை ஞாயிறு பாடுபொருளாக அமைந்ததைக் காட்டுகின்றன.

(இ) நிலவு: நிலவு பற்றிய பல பாடல்கள் கவிஞர் வாக்கில் பிறந்துள்ளன.

வில்லடித்த பஞ்சு

விட்டெறிந்த தட்டு முல்லைமலர்க் குவியல்

முத்தொளியின் வட்டம்

23. பாதா.க. தொகுதி - 1 பக்கம் 82 24. அழ. சிரிப் பக்கம் 26 25. இளை. இலக். பக்கம் 26-27.