பக்கம்:பாவேந்தரின் பாட்டுத்திறன்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 பாவேந்தரின் பாட்டுத்திறன்

நீர்திலை மீன்கள் நம்மீன்கள் - அவை நீல வானக் கடல்மீன்கள்:” இவை விண்மீன் பாடுபொருளாக அமைந்ததைக் காட்டுகின்றன.

(உ) வானவில்: ஒளியின் தன்மையைக் காட்டும் ஒப்பற்ற இயற்கை ஒவியமாம் இது பாடுபொருளாகின்றது.

மண்ணுலகும் கடல், மலை அனைத்தும்.உள் ளாக்கியே வளைந்தது வானவில்! என்னென்ன வண்ணங்கள் விண்முழுதும் கருமணல் அதன்மீது மாணிக்கம்! வீறிடும் திறப்பச்சை வயிரத் தடுக்குகள்! உள்திலவும் நீரோடை கண்ணையும் மனத்தையும் உயிரினொடும் அள்ளியே செல்கின்ற தல்லாமல் எண்ணற்ற அழகினால் இயற்கை விளையாடலின் எல்லை காணேன்,அதைச் சொல்லுமா றில்லையே!” பிறிதோர் இடத்தில் இதே வானவில் வேறொரு முறையில் காட்டப் பெறுகின்றது.

கதிர்எழுத்தது. மழைபொழிந்தது கானும் திசையிலே! புதுமை கொண்டது. பொலி வெழுந்தது வான்வில் இசையிலே!

செம்மை வண்ணம் செங்கொடிபோல் சிரித்தத்த விழுதது அம்மையின்கை பச்சைவளையல் அங்குத் தெரிந்தது!

மீன்கொத்திகள் பறப்பதுபோல நீலம் விளைந்தது! மான்குட்டிகள் விரைவதுபோல் மஞ்சன் வினைத்தது

29. ஒரு தாயின் உள்ளம் மகிழ்கிறது-பக்கம் 43 30. குயில் பாடல்கள். பக்கம் 13