பக்கம்:பாவேந்தரின் பாட்டுத்திறன்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

படுபொருள் Y 17

ஒவியனின் துரிகைபோல் ஊதா தளிர்ந்தது! துவிமலர் மாலைபோல்கரு நீலம் மிளிர்ந்தது!

புலவர்களின் பாடலைப்போல் பொன்மை நிறைந்தது: நிலவுலகில் மக்கள் மனம் நெகிழ விளைந்தது’ இங்கு வானவில்லின் ஏழு வண்ணங்களும் காட்டப் பெறுகின்றன.

4. அன்றாட நேரம் பற்றியவை (அ) அதிகாலை:

கொக்கோ கோகோ என இனிமையில் குரல் மிகுந்திடக் கூவல் - செவிக் குளிர்தரு அதிகாலை என்பதைக் குறித்திடும் மணிச்சேவல்!

திக்கார்ந்திடும் இருள் விலகிடும் சிறுபறவைகள் கூவும்- நல்ல திரைக்கடல்மிசை எழுந்திடும் தினம் செங்கதிரொளி துவும்!”

இவற்றில் அதிகாலை பாடுபொருளாகின்றது.

இவையும் அதிகாலைப் புனைவு பற்றியவையே.

அமைதியில் ஒளிஅரும்பும் அதிகாலை - மிக அழகான இருட்சோலை தனில்

இமைதிறந்தே தலைவி கேட்டாள் - சேவல் எழுந்திருப்பீர் என்று கூவல்

31. ஒரு தாயின் உள்ளம் மகிழ்கின்றது - பக்கம் 43 32. குயில் பாடல்கள் - பக்கம் 65