பக்கம்:பாவேந்தரின் பாட்டுத்திறன்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடுபொருள் 19

சிந்திய முத்துவடந்தான் - ஒளி

சேர்ந்திடும் நட்சத்திரங்கள்! சிந்தனையிற் கோபம் அடைந்தாள்-அத்தி

சின்முகம் இங்குத் திருப்பாள்” இவை படிப்போரிடம் ஒருவித கிளர்ச்சியை ஏற்படுத்துகின்றன.

5. மொழி பற்றியவை (அ) தமிழ்: பாவேந்தரின் பேச்சும் மூச்சும் தமிழே. தமிழின் இனிமை, பெருமை, முதலியவையற்றி எண்ணற்ற பாடல்கள். கனியிடை ஏறிய களை என்று பல இனிய பொருள்களை எடுத்துக்கூறி அவை

இனியன என்பேன் எனினும் - தமிழை என்னுயிர் என்பேன் காண்பீர்! என்று காட்டுவார். வண்டின் ஒலி முதல் பெண்கள் கொஞ்சிடும் இதழின் வாய்வரை பலவற்றைப் பட்டியலிட்டுக் காட்டி இவற்றை,

விழைகுவனேனும், தமிழும் - நானும் மெய்யாய் உடலுயிர் கண்டீர்! என்பார். தான் உடல், தமிழ் உயிர் என்று காட்டுவது அவர்தம் ஆழ்ந்த தமிழ்ப் பற்றை விளக்கி நிற்கின்றது. அண்ணன், தம்பி, அக்கம் பக்கத்து உறவின் முறையார், அன்னை, தந்தை, மனையாள், பிள்ளை - இவர்கள்,

அயலவராகும் வண்ணம் - தமிழ்என் அறிவினில் உறைதல் கண்டீர்! என்று மொழிவார்.

நாக்கிற்கு நற்சுவை நல்குவன பல உணவுப் பொருள்கள் உடலை வளர்ப்பன என்றும், உயிரை உணர்வை வளர்ப்பது தமிழ் என்றும் முத்தாய்ப்பாகப் பகர்வார்’ இன்னொரு பாடலில்,

தமிழுக்கும் அமுதென்று பேர்!- அந்தத் தமிழ்இன்பத் தமிழ்ளங்கள் உயிருக்கு நேர்!

36. குயில் பாடல்கள் - பக்கம் 66 37. பாதா.க. முதல் தொகுதி- பக்கம் 88

3