பக்கம்:பாவேந்தரின் பாட்டுத்திறன்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 பாவேந்தரின் பாட்டுத்திறன் என்று சிறப்பிப்பர். “தமிழியக்கம்” என்ற நூலே இவர்தம் தமிழ் உள்ளத்தைக் காட்டும் ஒரு பெருஞ் சான்றாகும்.

வெங்குருதி தனிற்கமழ்ந்து

வீரஞ்செய்கின்றதமிழ்

எங்கள் மூச்சாம்”

என்ற கவிஞரின் சங்கநாதம் நம் மனக்காதில் ஒலிக்கின்றதல்லவா? இங்ஙனம் தமிழ் பற்றி எண்ணற்ற பாடல்கள்!

(ஆ) தமிழ் வளர்ச்சி: இதுவும் பாடுபொருளாக அமைகின்றது கவிஞர் வாக்கில்:

எளியநடையில் தமிழ்நூல் எழுதிடவும் வேண்டும்

இலக்கணநூல் புதிதாக இயற்றுதலும் வேண்டும்

வெளியுலகில், சிந்தனையில் புதிதுபுதிதாக

வினைத்துள்ள எவற்றினுக்கும் பெயர்கள்ளலாம் கண்டு

தெளிவுறுத்தும் படங்களொடு சுவடியெலாம் செய்து

செந்தமிழைச் செழுந்தமிழாய்ச் செய்வதுவும் வேண்டும்.

உலகியலின் அடங்கலுக்கும் துறைதோறும் நூல்கள்

ஒருவர்தயை இல்லாமல் ஊரறியும் தமிழில் கலசலென எவ்விடத்தும் பாய்ச்சிவிட வேண்டும்.”

தாயெழிற் றமிழை என்றன்

தமிழரின் கவிதை தன்னை ஆயிரம் மொழியில் காண

இப்புவி அவாவிற் றென்ற தோயுறும் மதுவின் ஆறு

தொடர்ந்தென்றன் செவியில் வந்து பாபுநாள் எந்த நாளோ,

என்பன தமிழ் வளர்ச்சி பற்றிய கவிஞரின் சிந்தனையோட்டங்கள்.

கமுதல் தொகுதி பக்கம்100”

நா.க. முதல் தொகுதி பக்கம் 95 40. பாதா.க. முதல் தொகுதி பக்கம் 97