பக்கம்:பாவேந்தரின் பாட்டுத்திறன்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடுபொருள் Y 21

(இ) மொழிக்கொள்கை: இந்தி எதிர்ப்பே இவர்தம் முதலாய கொள்கையாகத் தெரிகின்றது. முழு மூச்சுடன் எதிர்க்கின்றார்.

இன்னலை ஏற்றிட மாட்டோம் - கொல்லும் இந்தியப் பொதுமொழி இந்தி என்றாலோ கன்னங் கிழிந்திட நேரும் - வந்த கட்டாய இந்தியை வெட்டிப் புதைப்போம்.” கட்டாய இந்தியைப் பற்றிப் பேசும் பாடல்கள்:

அன்னைக்குச் சோறில்லை எம்மிடத்தில் - இந்தி ஆனைக்குத் தீனியும் கட்டாயமாம். சின்னப் பிள்ளைக்குத் தாய்ப்பா லில்லை - இந்தித் தீநஞ்சை ஊட்டுதல் கட்டாயமாம்.

அம்மா எனத்தாவும் கைக் குழந்தை - இந்தி அம்மியில் முட்டுதல் கட்டாயமாம் இம்மாநிலத்தில் கல்வித்திட்டம் - இவ்வா றிட்டதோர் முட்டாளைக் கண்டதில்லை”

கன்னல் தமிழ்க் கல்வி

கட்டாய மாக்காமல் இன்னல்தரும் இந்தியினை

எண்ணுவதா என்தமிழா!

காய்ச்சலுறு நாட்டின்

கனித்தமிழே யல்லாது மூச்சிறுத்தும் இந்திவந்து

முட்டுவதா என்தமிழா!”

அரிமா உலவும் காட்டினிலே

ஆரி யம்போல் வாழ்கின்ற நரிமா வுக்கும் இடமின்றி

மறுக்க வில்லைநாம், ஆனால்

41. வேங்கையே எழுக. பக்கம் 76 42. வேங்கையே எழுக-பக்கம் 77 43. வேங்கையே எழுக-பக்கம் 80, 81