பக்கம்:பாவேந்தரின் பாட்டுத்திறன்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 Y_பாவேந்தரின் பாட்டுத்திறன்

பாடாத தேனீக்கள், உலவாத தென்றல்,

பசியாத தல்வயிறு, பார்த்த துண்டோ?” துணைவி இறந்தபின் வேறு துணைவியைத் தேடுமோர் ஆடவன் போல் - பெண்ணும் துணைவன் இறந்தபின் வேறுதுணை தேடச் சொல்லிடுவோம் புவிமேல்

காதல் சுரக்கின்ற நெஞ்சத்திலே - கெட்ட கைம்மையைத் தூக்காதீர்!- ஒரு கட்டழகன் திருத்தோளினைச் சேர்ந்திடச் சாத்திரம் பார்க்காதீர்’ கற்கண்டு போன்றபெண் கணவனை இழந்தால் கசத்தபெண் ஆவது விந்தைதான் புவிமேல்! சொற்கண்டு மலைக்காதே உன்பகுத்தறிவால் தோஷம், குறைந்து அறிந்து நடப்பாய்

- துயர் கடைப்பாய் துணைபிடிப்பாய் - பயம் விடுப்பாய்.”

மகளிர் மறுமணமும் பாடுபொருளாகின்றது.

7. சமுகம் பற்றியவை (அ) சாதி ஒழிப்பு: இது தந்தை பெரியார் கொள்கைகளுள்

ஒன்று. இதன் பரிணாமங்களும் பாடுபொருளாக அமைந்துள்ளன பாவேந்தர்களின் பாடல்களில்,

சாதி ஒழித்திடல் ஒன்று - நல்ல

தமிழ் வளர்த்தல் மற்றொன்று

பாதியை நாடு மறந்தால் - மற்றப்

பாதி துலங்குவ தில்லை.

சாதிகளைத்திட்ட ஏரி - நல்ல

தண்டமிழ் நீரினை ஏற்கும்

சாதி பிணிப்பற்ற தோளே. நல்ல 53. பாதாக:முதல் தொகுதி பக்கம் 82 84 சதாக:முதல் தொகுதி-பக்கம் 107 53. சதா.க.முதல் தொகுதி-பக்கம்.19