பக்கம்:பாவேந்தரின் பாட்டுத்திறன்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஐ பாவேந்தரின் பாட்டுத்திறன்

(ஈ) மூடப்பழக்கம். இதன் பரிணாமங்கள் கவிஞரின் பாடல்களில் முக்கிய பாடுபொருளாகின்றது.

பேடி வழக்கங்கள் மூடத்தனம் - இந்தப் பீடைகளே இங்குச் சாத்திரங்கள்”

மூடத் தனத்தின் முடைநாற்றம் வீசுகின்ற காடு மணக்கவரும் கர்ப்பூரப் பெட்டகமே!”

மலம் கழிப்பதைப் போல் - உள மடமையினைப் போக்கு” மறுமை உலகம் என்று - நீ

மயக்கமுற வேண்டா சிறுமை மதம்சாதி, இழி சீழ்பிடித்த எண்ணம்.” இவை பல்வேறு இடங்களில் முகிழ்த்தவை.

(2) சங்கங்கள்: கடல் வாழ் சங்குகள் கூட்டம் கூட்டமாக வாழ்வதால் அக்கூட்டத்திற்குச் சங்கம்” என்ற பெயர் வழங்கலாயிற்று. பின்னர் அறிஞர்கள் கூடும் கூட்டத்திற்கும் அத்திருப்பெயர் வைக்கப் பெற்றது. புத்தசமயம் சங்கத்தால் நிலைபெற்று வளர்ந்தது. முச்சங்கங் கால் தமிழ் வளர்ச்சிநிலைபெற்றது.இக்காலத்தில் தொழிற்சங்கங்கள் உருவாகித் தொழிலாளர்களின் ஒற்றுமையை வளர்க்கின்றன; அவர்கள் நலமும் காக்கப்பெறுகின்றது. உணவுப்பொருள், உடைகள், நுகர்வோர் சங்கங்கள் முதலியவை இக்கால யுகதர்மங்களாகக் காட்சியளிக்கின்றன. மக்களாட்சி நடைபெறும் இக்காலத்தில் தனிப்பட்டோர் நலன்கள் சங்கங்களால் காக்கப்பெறுகின்றன."ஏழைச் சொல் அம்பலம் ஏறாது” என்ற உண்மையை உணர்ந்த மக்கள் சங்கங்கள் மூலம் அரசுக்குத் தம் கோரிக்கைகளை விடுத்து நிறைவேறச் செய்கின்றனர்.இச்சங்கம் பாவேந்தர் கவனத்திற்கு வந்து அது அவர் கவிதைக்குப் பாடுபொருளாகவும் அமைந்தது. 75 சதாகதொகுதி க்கம் 65T :: தா.க. தொகுதி. பக்கம் 127 ‘? ஒரு தாய் உள்ளம் மகிழ்கிறது- பக்கம் 54 73. ஒரு தாய் உள்ளம் மகிழ்கிறது. பக்கம் 54