பக்கம்:பாவேந்தரின் பாட்டுத்திறன்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

படுபொருள் 33

சங்கங்களால் - நல்ல சங்கங்களால் - மக்கள் சாதித்தல் கூடும் பெரும்பெரும் காரியம்

சிங்கங்கள் போல் - இளம் சிங்கங்கள் போல் - பலம் சேர்ந்திடும் ஒற்றுமை சாந்திட லாலே

பொங்கும் நிலா - ஒளி பொங்கும் நிலா - எப் பூரிக்கும் நெஞ்சிற் புதுப்புதுக் கோரிக்கை

தூய எண்ணம் - மிகு தூய எண்ணம் - இங்குத் தோன்றிடில் இன்பங்கள் தோன்றிடும் ஞாலத்தில்” ஆனால், சாதி சங்கங்களின் கொடுமை சொல்லுந்தரம் அன்று. முற்போக்குச் சாதியினர் சாதிப் பெயர்கள் பிற்போக்குச் சாதியினர் பெயர்ப் பட்டியல்களில் இடம் பெறுவதுதான் நகைச்சுவை. இந்தப் பரிணாமம் பள்ளி, கல்லூரிகள், அலுவலகங்கள் போன்றவற்றில் இடம்பெறச் செய்யும் கொடுமை நெஞ்சை வெடிக்கச் செய்யும். சமூக அநீதியை விளைவிக்கும்.

8. அறிவு வளர்ச்சி பற்றியவை (அ) பத்திரிக்கை: இக்காலத்தில் செய்தித் தாள்” என்ற சொற்கள்தாம் தொடக்கக் காலத்தில் பொதுமக்கள் நாவில் “பத்திரிக்கை” என்று தாண்டவமாடியதால் பாவேந்தரும் அந்தச் சொல்லாலேயே குறிப்பிட்டுக் கவிதைகள் புனைந்துள்ளார். குடியரசு தழுவிய அரசியலில் பத்திரிக்கையை “நான்காவது சொத்து” (Fourth Estate) என்று போற்றிப் புகழ்வது உண்டு. இன்று காலை காஃபிக்கு முன்னர் செய்தித்தாளையே அதிகமாக மக்கள் எதிர்பார்க்கின்றனர். தேர்தல் காலங்களில் இதன் மதிப்பு மேலும் பெருகுகின்றது. இக்காலத்தில் சில புதிய செய்தித்தாள்களும் தோன்றுகின்றன.

இத்தகைய செய்தித்தாளைப்பற்றி பாவேந்தர் ஏழு பாடல்களைப் படைத்துள்ளார்; அருமையான பாடல்கள். 74. பா.தா.க. தொகுதி-2 பக்கம் 139-142