பக்கம்:பாவேந்தரின் பாட்டுத்திறன்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடுபொருள் v 35

வானிடை திகழும் கோடி

மாயங்கள் மாதி லத்தில் ஊனிடை உயிரில் வாழ்வின்

உட்புறம் வெளிப்புறத்தே ஆனநற் கொள்கை, அன்பின்

அற்புதம் இயற்கைக் கூத்துத் தேனிதழ் தன்னிற் சேர்த்துத்

தித்திக்கத் தருவாய் நித்தம் (4)

ஒவியம் தருவாய்! சிற்பம்

உணர்விப்பாய்! கவிதை யூட்டக் காவியம் தருவாய்! மக்கள் கலகல வெனச்சி ரிப்பு மேவிடும் விகடம் சொல்வாய்! மின்னிடும் காதல் தந்து கூவுவாய்! விரப் பேச்சுக்

கொட்டுவாய் கோலத் தாளே! (5) என்பவை பத்திரிக்கைப் பெண்ணை அறிமுகப்படுத்தும் அற்புதக் கவிதைகள். இத்தகைய பத்திரிக்கையை. தெருப்பெருக் கிடுவோருக்கும்

செகம்காக்கும் பெரியோ ருக்கும்,கை இருப்பிற்பத் திரிகை நாளும்

இருந்திடல் வேண்டும்” (7) என்று பரிந்துரை செய்கின்றார்.

(ஆ) புத்தகசாலை பாடம் பயிற்றல் இடம்- பாடசாலை, தொழில் நடைபெறும் இடம் - தொழிற்சாலை”, புத்தகங்கள் வைக்கப் பெற்றிருக்கும் இடம் - புத்தகசாலை’ என்ற முறையில் இப்பெயர் வழங்குவதைக் கண்டு கவிஞர் இப்பெயர் சூட்டினார் போலும். கல்வெட்டுகளில் இதற்கு “சரசுவதி பண்டாரம்” என்ற பெயர் காணப் பெறுகின்றது. மொழித்துாய்மையை விரும்பும் இக்காலத்தார்

75. பாதா.க. முதல் தொகுதி-பக்கம் 186-187.