பக்கம்:பாவேந்தரின் பாட்டுத்திறன்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 பாவேந்தரின் பாட்டுத்திறன் தொடக்கத்தில் நூல் நிலையம் என்றனர். அது நாளாவட்டத்தில் ஆாகம் என்று சுருங்கிய வடிவம் பெற்றது.காலம் இடம், இனம்,நாடு, நிறம், பால் போன்ற வேற்றுமையின்றி பல அறிஞர்கள் ஒரிடத்தில் ஒன்று கூடியிருப்பது போல் அவர்கள் வரைந்த நூல்கள் ஒரிடத்தில் தொகுக்கப்பெற்று எளிதாக எடுப்பதற்கேற்றவாறு அடுக்கி வைக்கப் பெற்றுள்ளன. படிப்பில் விருப்பார்வமுள்ளவர்கள் நூலகத்தினுள் நுழையும்போது இத்தனை அறிஞர்களையும் நேரில் காண்பது போன்ற ஒருவித சிரமையை அடைகின்றனர். இத்தகைய உணர்ச்சியைக் கவிஞர் பெற்றதை

தனித்தமைந்த வீட்டிற்புத்தகமும் நானும்

சையோகம் புரிந்ததொரு வேளை தன்னில் இனித்தபுவி இயற்கையெழில் எல்லாம் கண்டேன்;

இசைகேட்டேன்; மனம்மோந்தேன் சுவைகள்

உண்டேன்! மனிதரிலே மிக்குயர்ந்த கவிஞர் நெஞ்சின்

மகாசோதி யிற்கலந்ததெனது நெஞ்சும்: சனித்ததங்கே புத்துணர்வு:புத்தகங்கள்

தருமுதவி பெரிது!மிகப் பெரிது கண்டீர் (1)

இங்ஙனம் நூலகத்தைப்பற்றி ஐந்து பாடல்களை யாத்துள்ளார் கவிஞர் பெருமான்.

மனிதரெல்லாம் அன்புநெறி காண்ப தற்கும்

மனோபாவம் வானைப்போல் விரிவடைந்து

தனிமனித தத்துவமாம் இருளைப் போக்கிச்

சகமக்கள் ஒன்றென்பதுணர்வதற்கும்

இனிதினிதாப் எழுந்தஉயர் எண்ண மெல்லாம்

இலகுவது புலவர்தரு சுவடிச் சாலை

புனிதமுற்று மக்கள்.புது வாழ்வு வேண்டில்

புத்தகசாலைவேண்டும் நாட்டில் யாண்டும் {2}

என்று நூலகத்தின் பெருமை, இன்றியமையாமை பற்றி எடுத்துரைப்பார். இந்த நூலகத்தில் என்னென்ன நூல்கள் இருக்க வேண்டும் என்பதை