பக்கம்:பாவேந்தரின் பாட்டுத்திறன்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடுபொருள் Y 37

தமிழர்க்குத் தமிழ்மொழியிற் சுவடிச் சாலை

சர்வகலா சாலையைப்போல் எங்கும் வேண்டும்; தமிழிலாப் பிறமொழிநூல் அனைத்தும் நல்ல

தமிழாக்கி வாசிக்கத் தருதல் வேண்டும்; அமுதம்போல் செந்தமிழில் கவிதை நூல்கள்

அழகியவாம் உரைநடையில் அமைந்த நூல்கள் சுமைகமையாய்ச் சேகரித்துப் பல்கலைசேர்

துறைதுறையாப்ப் பிரித்தடுக்கி வைத்தல் வேண்டும் (3) என்ற கவிதையால் புலப்படுத்துவார். நூலகத்தில் படிப்போருக்கு என்னென்ன வசதிகள் செய்துதர வேண்டும் என்பதை,

வாசிக்க வருபவரின் வருகை ஏற்றும்

மரியாதை காட்டிஅவர்க் கிருக்கை தந்தும் ஆசித்த நூல்தந்தும் புதிய நூல்கள்

அழைத்திருந்தால் அதையுரைத்தும் நாளும் நூலை நேசித்து வருவோர்கள் பெருகும் வண்ணம்

நினைப்பாலும் வாக்காலும் தேகத் தாலும் மாசற்ற தொண்டிழைப்பீர்! சமுதாயச்சீர்

மறுமலர்ச்சி கண்டதென முழக்கம் செய்வீர்!” என்ற கவிதையால் புலப்படுத்துவார்.

இன்று கவிஞரின் கருத்தையொட்டி நூலக இயக்கம் தோன்றிச் செயற்பட்டு அதன் சார்பாக அரசு நாட்டின் பல்வேறு இடங்களில் நூலகங்களைத் தோற்றுவித்துள்ளது.

கைத்திறச் சித்தி ரங்கள்

கணிதங்கள் வான நூற்கள், மெய்த்திற நூற்கள், சிற்பம்

விஞ்ஞானம் காவியங்கள் வைத்துள தமிழர் நூல்கள்

வையகத்தின் புதுமை என்னப் புத்தக சாலை எங்கும்

புதக்குநாள் எந்த நாளோ?”

76. பா.தா.க. முதல் தொகுதி-பக்கம் 170-171 77. பாதா.க. முதல் தொகுதி-பக்கம் 97