பக்கம்:பாவேந்தரின் பாட்டுத்திறன்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 பாவேந்தரின் பாட்டுத்திறன்

என்ற பாடல் கவிஞரின் குறிக்கோள் நிலையைக் காட்டுகின்றது. அரசு நூல்களை வாங்குவதில் கவனம் வேண்டும். நல்ல நூல்கள் இடம் பெறாது போகின்றன; தரமற்ற நூல்கள் இடம் பெற்று விடுகின்றன. “இங்கு லஞ்சலாவண்யமும் நடைபெறுவதாகப் பேச்சு அடிபடுகின்றது. இங்குதடைபெறும் “தில்லுமுல்லுகளை”அரசு தவிர்க்கும் வழிகளைக் காணல்வேண்டும்.

(இ) சினிமா: பாமர மக்களுக்குப் பக்குவமாக அறிவு புகட்டுவதற்கு சினிமாத் துறைபோல் வேறு இல்லை. பாவேந்தர் காலத்தில் சினிமா இருந்த நிலைக்கும் இன்று அது வளர்ந்திருக்கும் நிலைக்கும் இடையே மலையனைய வேற்றுமை காணலாம். பல்வேறு உத்தி முறைகளையெல்லாம் கையாண்டு மிகச் சிறப்பாகப் படம் எடுக்கின்றனர். ஆனால், தொடக்கக் காலத்தில் புராணப் படங்கள், பக்திக் கதைகள் அமைந்த படங்கள்; அடுத்த கட்டத்தில் எழுந்த சமூகநீதிகளைச் சுட்டும் படங்கள், மக்கள் மனத்தில் பதிக்கும் சுவடுபோல் பெரும்பான்மையான இன்றைய படங்கள் நிலையான கருத்துக்களை நிலை நிறுத்துவதில்லை. கடத்தல் காட்சிகள், அச்சமூட்டும் கொலைக்காட்சிகள், சூறையாடும் காட்சிகள், தீ வைப்புக் காட்சிகள், மங்கையரைக் கற்பழிக்கும் காட்சிகள், வங்கிக்கொள்ளைக் காட்சிகள் இவை எதற்காகப் படங்களில் காட்டப்படுகின்றனவோ தெரியவில்லை.

சண்டைக் காட்சிகள் இல்லாத படங்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு இவை மலிந்து காணப்படுகின்றன.

பாவேந்தர் காலத்தில் இருந்த சினிமா நிலையைப்பற்றி அவர் பாடல்களில் காணலாம். அவர் முதன்முதலாக ஒர் ஆங்கிலப் படத்தைக் காண்கின்றார். அதைப்பற்றி அவர் கூறுவது.

புலிவாழும் காட்டினிலே ஆங்கிலப் பெண் ஒருத்தி புருஷர்சக வாசமிலாப் புதுப்பருவ மங்கை மலர்க்குலத்தின் அழகினிலே வண்டுவிழி போக்கி வசமிருந்த படியிருந்தாள் பின்பக்கம் ஒருவன் எலிபிடிக்கும் பூனைபோல் வந்தந்த மங்கை

எழில்முதுகில் கைவைத்தான்! புதுமைஒன்று கண்டேன்!