பக்கம்:பாவேந்தரின் பாட்டுத்திறன்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடுபொருள் 39 உளமுற்ற கூச்சந்தான் ஒளிவிழியில் மின்ன

உயிரதிர்ந்த காரணத்தால் உடல்அதிர்ந்து நின்றே தெளிபுனலின் தாமரைமேல் காற்றடித்த போது

சிதறுகின்ற இதழ்போல செவ்விதழ் துடித்துச் சுளைவாயால் நீயார்என் றனல்விழியால் கேட்டாள்;

சொல்பதில்நீ என்றதவள் கட்டுவிரல் ஈட்டி! களங்கமிலாக் காட்சி அதில் இயற்கைழிைல்

கண்டேன்! கதைமுடிவில் “படம்” என்ற நினைவுவந்த தன்றே: படம் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று நினைக்கின்றார். உரிமையுள்ள நாட்டில் வாழ்பவர்கள் எடுத்த படம் அல்லவா?

தமிழர்கள் எடுத்த படங்கள்பற்றிக் கவிஞர் கூறுவது:

ஒன்றேனும் தமிழ்நடை யுடைபாவனைகள்

உள்ளதுவாய் அமைக்கவில்லை, உயிருள்ள தில்லை! ஒன்றேனும் தமிழருமை உணர்த்துவதா யில்லை!

ஒன்றேனும் உயர்நோக்கம் அமைந்ததுவாயில்லை ஒன்றேனும் உயர்நடிகர் வாய்ந்ததுவாயில்லை:

ஒன்றேனும் வீழ்ந்தவரை எழுப்புவதாயில்லை!

இப்பாடலில் எதை நினைத்துக் கவிஞர் பேசுகின்றார் என்பது தெரியவில்லை. நடிகர் பஞ்சத்தால் “உயர் நடிகர்” இல்லாதிருக்கலாம். செலவுக்கஞ்சி படமுதலாளிகள் இரண்டாந்தர, மூன்றாந்தர நடிகர்களை வைத்து எடுத்த படங்களாக இருக்கலாம். தனித்தமிழில் பாத்திரங்கள் பேசவில்லை என்று கவிஞர் கருதினால், அது நடைமுறைக்கு ஒவ்வாத கருத்தாகக் கொள்ள வேண்டும்.

அக்காலத்தில் தமிழ்நாடு, கேரளம், கர்நாடகம், ஆந்திரம் ஆகியவை அடங்கிய “சென்னை இராஜதானி” என்ற பெயரால் வழங்கி வந்தது. அடிமை நாடாக இருந்ததால் மொழி உணர்வு இல்லாதிருந்தது.பண்பாடும்"கலப்புப் பண்பாடாக இருந்தது. ஆகவே படம் அமைந்த நிலை இது: