பக்கம்:பாவேந்தரின் பாட்டுத்திறன்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடுபொருள் Y 41

பயன் விளைக்கும் விதத்தினிலே பலசெல்வர் கூடி இடக்ககற்றிச் சுயநலத்தைச் சிறிதேனும் நீக்கி

இதயத்தில் சிறிதேனும் அன்புதனைச் சேர்த்துப் படமெடுத்தால் செந்தமிழ் நாடென்னும் இளமயிலும்

படமெடுத்தாடும் தமிழர் பங்கமெலா போமே!” நல்ல யோசனைதான் முதலாளி வர்க்கம் இதற்குச் செவிசாய்க்க வேண்டுமே.

பிறிதோரிடத்தில் சினிமா பற்றியும் பேசுகின்றார்: சீரியநற் கொள்கையினை எடுத்துக் காட்டச்

சினிமாக்கள் நாடகங்கள் நடத்த வேண்டும் கோரிக்கை பணம்ஒன்றே என்று சொன்னால்

கொடுமையிதை விடவேறே என்ன வேண்டும்? பாராத காட்சியெல்லாம் பார்ப்பதற்கும்

பழமைநிலை நீங்கிநலம் சேர்ப்பதற்கும் ஆராய்ந்து மேல்நாட்டார் நாட கங்கன்

அமைக்கின்றார் முன்னேற்றம் அடைகின்றார்கள் இத்தகைய குறிக்கோள் நிலையைக் கவிஞர் எதிர்பார்க்கின்றார். பெரியார் பாதையில் செல்பவராதலால் புராணப் படங்களை அறவே வெறுக்கின்றார். புராணக் கதையானாலும், நவீன சமூகக் கதையானாலும் மக்களை நன்னெறியில் செலுத்தும் போக்கில் படங்கள் அமைதலைத்தான்நாம் எல்லோரும் வேண்டுவது. புராணப்பட வெறுப்பு அடியிற்கண்ட பாடலில் எதிரொலிக்கின்றது. முன்னேற்றம் கோருகின்ற இற்றை நாளில் மூளிசெயல் தாங்காத நல்ல தங்கை தன்னேழு பிள்ளைகளைக் கிணற்றில் போட்ட சரிதத்தைக் காட்டுகின்றார் சினிமாக் காரர்” பண்டைய புராணங்கள், இதிகாசங்கள் இவற்றைக் கவிஞர் வெறுப்பது துரதிர்ஷ்டவசமானது. இவற்றிலடங்கியுள்ள தத்துவ உண்மைகளே இவற்றை அழியாமல் காக்கும். இன்றைய 78. பாதா.க. முதல் தொகுதி - பக்கம் 167-169 79. பாதா.க.: இரண்டாம் தொகுதி- பக்கம் 149-150