பக்கம்:பாவேந்தரின் பாட்டுத்திறன்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 பாவேந்தரின் பாட்டுத்திறன் சமுதாயத்திற்கு இவை அவசியம் வேண்டும். பாலசந்தர் போன்ற அறிஞர்கள் மனம் வைத்தால் புராணக் கதைகளுக்குப் புதுமெருகூட்டிப் படமாக்கலாம்.

9. பொதுவானவை

(அ) மானிட சக்தி: இதுவும்பாவேந்தர் பாடலில் பாடுபொருளாக அமைகின்றது.

மானிடத் தன்மையைக் கொண்டு - பலர்

வையத்தை ஆள்வது நாம்கண்ட துண்டு மானிடத் தன்மையை நம்பி - அதன்

வன்மையி னாற்புவி வாழ்வுகொள் தம்பி!

“மானிடம்” என்றொரு வாளும் - அதை

வசத்தில் அடைத்திட்ட உன்இரு தோளும்

வானும் வசப்பட வைக்கும் - இதில்

வைத்திடும் தம்பிக்கை வாழ்வைப் பெருக்கும்”

பாரடா! உனது மானிடப் பரப்பைப்! பாரடா உன்னுடன் பிறந்தபட்டாளம்: “என் குலம்’ என்றுனைத் தன்னிடம் ஒட்டிய மக்கட் பெருங்கடல் பார்த்து மகிழ்ச்சிகொள்! அறிவை பிரிவுசெய்! அகண்ட மாக்கு விசாலப் பார்வையில் விழுங்கு மக்களை! அனைத்துக் கொள்உனைச் சங்கம மாக்கு மானிட சமுத்திரம் நானென்று கூவு’ இச்சக்தியை மக்கள் இன்னும் சரியாக உணரவில்லை. . (ஆ) பொதுவுடைமை; இது சிறப்பான இடம் பெறுகின்றது.

புதியதோர் உலகம் செய்வோம் - கெட்ட போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம் பொதுவுடைமைக் கொள்கை திசைஎட்டும் சேர்ப்போம் புனிதமோடு அதை எங்கள் உயிரென்று, காப்போம்.” 1. பச.தா.க.முதல் தொகுதி. பக்கம் 145

1. பாதா.க. முதல் தொகுதி-பக்கம் 150 82. பாதா.க.முதல் தொகுதி. பக்கம் 158