பக்கம்:பாவேந்தரின் பாட்டுத்திறன்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடுபொருள் Y 45

இந்தவான், மண்கனல், எரி, வளி உருப்படா அந்தநாள் எழுந்தஓர் ‘அசைவினால்” வானொடு வெண்ணி லாவும் விரிகதிர் தானும், எண்ணிலா தனவும் எழுந்தன வாகும்

அணுத்தொறும் இயங்கும்.அவ் வசைவியக்கத்தைத் துணிப் பிலா இயற்கையின் தொழிலெனச் சொல்வார் அழியா தியங்கும்.அவ் வசைவே மக்களின் தொழிலுக்கு வேரெனச் சொல்லினும் பொருந்தும் ஆயினும் உன்னினும் அதுசிறந்த தன்று தாயினும் வேண்டுவது தந்திடும் தொழிலே!”

இங்ஙனம் தொழில்பற்றி அறிவியல் நோக்கில் கவிதை உருவாகிறது. கூடித் தொழில் செய்வதும் பாடுபொருளாக அமைகின்றது.

பற்பலபேர் சேர்க்கை பலம்சேர்க்கும் செய்தொழிலில் முற்போக்கும் உண்டாகும் முன்னிடுவீர் தோழர்களே!

பீடுற்றார் மேற்கில் பிறநாட்டார் என்பதெல்லாம் கூடித் தொழில் செய்யும் கொள்கையினால்

வாடித் தொழிலின்றி வறுமையாற் சாவதெல்லாம் கூடித் தொழில்செய்யாக் குற்றத்தால்

கூடித் தொழில்செய்யாக் குற்றத்தால் இன்றுவரை மூடிய தொழிற்சாலை முக்கோடி” இக்கருத்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும்.

(ஊ) தொண்டர்கள்: பெரியோர்கள் யாவரும் ஒருவகையில் தொண்டர்கள்ே. நாட்டிற்கும், மொழிக்கும், கல்விக்கும் பணியாற்றிய பல தொண்டர்கள் பாவேந்தரின் கவிதைக்குப் பாடுபொருளாக அமைகின்றனர். எடுத்துக்காட்டுகளாக சிலரைக் காண்போம். அண்ணாமலை நகர் ஆக்கி அண்ணாமலைப் பல்கலைக்கழகம்

90. பாதா.க: தொகுதி-2 பக்கம் 125. நாள் மலர்கள்’ என்ற தொகுப்பிலும் பக்கம்

93-ல் காணப்படுகின்றது. 91. பாதா.க. தொகுதி-2 பக்கம் 135-136